ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போய் இருக்கும் SMS பட நடிகை- எப்படி இருக்காருன்னு பாருங்க

By subhashini · 8/5/2022

ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போய் இருக்கும் SMS பட நடிகையின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் ஜீவா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளி வந்து இருந்த படம் ‘சிவா மனசுல சக்தி’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதிலும் ஜீவா மற்றும் சந்தானத்தின் காமெடி சரவெடியாக இருந்தது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் நடிகை அனுயா.

மேலும், இந்த சிவா மனசுல சக்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விட இவருக்கும் தமிழ் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருந்தது. சிவா மனசுல சக்தி படத்தைத் தொடர்ந்து மதுரை சம்பவம் என்ற படத்தில் அனுயா நடித்திருந்தார். ஆனால், அந்தப் படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவி இருந்தது. அதன் பின்னர் அனுயா நகரம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவருக்கு சரியாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.

அனுயா திரைப்பயணம்:

பின்னர் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இவரை மறந்த நிலையில் சுசி லீக்ஸ் இவரை நினைவுபடுத்தி இருந்தது. பிரபல பின்னணி பாடகியான சுசித்ராவின் பெயரில் வெளியான சுசி லீக்சில் இவரது ஆபாச படங்கள் வெளியாகி இருந்தது. அதன் பின்னர் இவரை கூகுளில் ரசிகர்கள் மீண்டும் தேட தொடங்கி இருந்தார்கள். இதனால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனுயா:

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே இவர் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் வேறு எந்தத் திரைப்படத்திலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அனுயா தொலைக்காட்சி பக்கம் நடுவராக சென்று விட்டார். மேலும், இவர் வெப் தொடரில் படு கவர்ச்சியாக நடித்து இருந்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. தற்போது இவரை தொலைக்காட்சிகளில் கூட பார்க்க முடியவில்லை.

கவர்ச்சி தொடரில் நடித்த அனுயா:

சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், ரீல்ஸ் விடியோ என்று சோசியல் மீடியாவில் ஏதாவது ஒன்றை பதிவிட்டு வருகிறார். இதனால் இவரை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலர் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் தற்போது அனுயா தன்னுடைய இஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அது என்னவென்றால்,

குண்டாக இருக்கும் அனுயா:

தற்போது அனுயா சற்று குண்டாக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார். அந்த வீடியோவை தான் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி ஆன்ட்டி மாதிரி இருக்கிறீர்கள் என்று கமெண்ட் எல்லாம் போட்டு வருகிறார்கள். தற்போது அனுயாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full