நிறைவேற போகும் தந்தையின் ஆசை. சினேகனுக்கு விரைவில் திருமணம். பெண் யார் தெரியுமா ?

By Rajkumar · 21/5/2021

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார். ஆனால், பலரும் சினேகன் தான் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்று கூறினர். அதே போல நிகழ்ச்சியில் கட்டிப்பிடி வைத்தியர் என்ற பெயரை எடுத்தவர் பாடலாசிரியர் சினேகன்.

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக இருந்து வந்த இவர் தனது ஆரம்ப காலங்களில் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் பணிபுரிந்தார். பின்னர் தனியாக வந்து பாடல்களை எழுத துவங்கி தற்போது வரை 2500 பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் சினேகன். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வந்த யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள இவர் பின் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்.

இதையும் பாருங்க : திருநங்கைகளை பற்றி தயாராக பேசிய டிக் டாக் திவ்யா - நேரில் சென்று வெளுத்த திருநங்கைகள். கதறிய திவ்யா. வைரல் வீடியோ.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நூலகம் ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்த சினேகன் தற்போது பணங்காட்டு நரி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம்ஆகி இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் பாபு இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த படத்தை பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதே போல நடிகர் சினேகன், பொம்மி வீரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ரமேஷ் மகாராஜா என்பவர் இயக்கம் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இடையமைத்துள்ளார். கடந்த ஆண்டு தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. மேலும், தனது உறவுக்காரப் பெண்ணை தான் சினேகன் திருமணம் செய்துகொள்ளப்போகிறாராம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகனின் தந்தை வந்த போது சினேகனுக்கு திருமணம் செய்து வைப்பது தான் தனது கடைசி ஆசை என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full