'குழந்தை பெத்துக்க ரெடி' சந்தோசமான செய்தியை சொன்ன சினேகன், கன்னிகா - குவியும் வாழ்த்துக்கள்

By Rajkumar · 31/7/2024

திருமண நாளில் சினேகன்- கன்னிகா இருவரும் சந்தோஷமான செய்தியை கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. இவர் 2500 பாடலுக்கு மேல் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று. அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான்.

இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார் என்று சொல்லலாம் . இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் கமலின் கட்சியில் இணைந்தார்.

சினேகன் – கன்னிகா திருமணம்:

இதனிடையே சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து இருந்தார்கள். இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சயாக நடந்து இருந்தது. கன்னிகாவும் நடிகை தான். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த ‘கல்யாண வீடு' என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

சினேகன் – கன்னிகா குறித்த தகவல்:

பின் இவர் தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் இருவருக்கும் 10 வருடம் வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆழமாகக் காதலித்து தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்தும் வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி வருடங்கள் சில கடந்தாலும், இருவருமே குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. இது குறித்த பலருமே ஏன்? எதற்கு? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். இருந்தாலுமே, இருவரும் மௌனம் காத்து வந்தார்கள்.

View this post on Instagram

A post shared by Kannika Snekan (@kannikasnekan)

சினேகன் – கன்னிகா பதிவு:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர்கள் தங்களுடைய மூன்றாவது திருமண நாளை கொண்டாடி இருந்தார்கள். இதற்கு பலருமே வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். மேலும், இது தொடர்பாக அவர்கள், தங்களுடைய திருமண நாளில் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு, நாங்கள் இருவருமே குழந்தை பெற்றுக் கொள்ள தயாராகி விட்டோம். உன்ன மாதிரி ஒரு பொண்ணு பெத்து கொடுத்துட்டு நீ கிளம்பிட்டே இரு என்று சினேகன் சொல்ல கன்னிகா வெட்கத்தில் சிரித்தார். இதை பார்த்து பலரும், வாழ்த்துக்களை தெரிவித்து கன்னிகா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று கேட்டு வருகிறார்கள்.

சினேகன்- கன்னிகா தொழில்:

சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் பிசியாக இருக்கிறார். கன்னிகா யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இதில் அவர் தன் கணவருடன் இருக்கும் புகைப்படம், வீடியோ என்று அனைத்தையும் பகிர்ந்து வருவார். சமீபத்தில் கூட இவர் புதிய தொழிலை ஆரம்பித்திருப்பதாக அறிவித்து இருந்தார். இவர்கள் ‘சினேகன் ஹெர்ப்ஸ்’ என்ற பெயரில் ஹெர்ப்ல் ஹேர் ஆயில் என்ற பிராண்ட் எண்ணையை உருவாக்கும் தொழிலை தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

behindtalkies AMP · Quick view
View full