நிறைவேறிய ஆசை, சினேகன் திருமணத்தில் ஆனந்த கண்ணீரில் தந்தை. நெகிழ்ச்சியான புகைப்படம்.

By Rajkumar · 29/7/2021

பிரபல பாடல் ஆசிரியரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சினேகனுக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

ஆனால், பலரும் சினேகன் தான் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்று கூறினர். அதே போல நிகழ்ச்சியில் கட்டிப்பிடி வைத்தியர் என்ற பெயரை எடுத்தவர் பாடலாசிரியர் சினேகன்.தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக இருந்து வந்த இவர் தனது ஆரம்ப காலங்களில் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் பணிபுரிந்தார். பின்னர் தனியாக வந்து பாடல்களை எழுத துவங்கி தற்போது வரை 2500 பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் சினேகன்.

இதையும் பாருங்க : கோமா நிலையில் தனது நண்பர் வேணு ஸ்டாலினுக்கு ட்வீட் போட்டுள்ள நீங்கள் கேட்ட பாடல் பார்த்தசாரதி. (இதான் நட்புன்றது)

இப்படி ஒரு நிலையில் சினேகனுக்கு இன்று நடிகை கன்னிகாவுடன் திருமணம் நடைபெற்று உள்ளது. நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு கன்னிகா தான். இவர் தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். அதே போல பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சினேகனுக்கு திருமணம் ஆனதால் அவரது தந்தை ஆனந்த கண்ணீரில் ஆழ்ந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகனின் தந்தை வந்த போது சினேகனுக்கு திருமணம் செய்து வைப்பது தான் தனது கடைசி ஆசை என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் தனது ஆசை நிறைவேறிய சந்தோசத்தில் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார் சினேகனின் தந்தை. மேலும், தனது மகனின் திருமணத்தை முன்நின்று நடத்தி வைத்ததற்காக கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full