காதல் மனைவிக்கு கவிதை எழுதிய சினேகன் - இப்படி பேசி தான் கரெக்ட் பண்ணி இருப்பார் போல

By Rajkumar · 2/8/2021

பிரபல பாடல் ஆசிரியரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சினேகனுக்கு கடந்த 29ஆம் தேதி திருமணம் நடைபெற்று இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது தன்னை ஒரு காதல் மன்னன் போல பிரதிபலித்த சினேகனுக்கு திருமணம் செய்து பார்ப்பது தான் கடைசி ஆசை என்று கூறினார் அவரின் தந்தை. இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சினேகனுக்கு கன்னிகா என்ற நடிகையுடன் திருமணம் நடைபெற்றது. நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு கன்னிகாதொடரில் நடித்துள்ளார்

இவர் தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். அதே போல பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக சினேகன் - கன்னிகா இருவரும் காதலித்துவந்துள்ளனர். அதாவது சினேகன் பிக் பாஸில் கலந்துகொள்ளும் முன்னரே இவரை காதலித்து உள்ளார். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவுசெய்தனர்.

சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் வைத்து சினேகன்- கன்னிகா திருமணம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் திருமணத்திற்கு பின் தனது காதல் மனைவி பற்றி முதல் முறையாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டு '

காதலியே.. மனைவியாய்..
மனைவியே..காதலியாய்..
அமைவது பெரும் வரம்.

அந்த வரம் எனக்கு
கிடைத்திருக்கிறது.

இந்த புகைப்படம் அதை நினைவுப்படுத்துகிறது

'கவிதையாக பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் இப்படி கவிதா பேசி தான் கரெக்ட் பண்ணிட்டார் போல என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full