தன் காதல் மனைவி பெயரை பச்சை குத்திக்கொண்டுள்ள சினேகன். அதுவும் எப்படி பாருங்க (கவிஞர் ஆச்சே)

By Rajkumar · 2/10/2021

பிரபல பாடல் ஆசிரியரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சினேகனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்று இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் சினேகனுக்கு கன்னிகா என்ற நடிகையுடன் திருமணம் நடைபெற்றது. நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு கன்னிகா தொடரில் நடித்துள்ளார்.இவர் தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். அதே போல பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக சினேகன் - கன்னிகா இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதையும் பாருங்க : அப்பா படத்தில் நடித்த கேபிய தெரியும். இந்த பொண்ண ஞாபகம் இருக்கா ? எப்படி இருகாங்க பாருங்க.

இந்த நிலையில் இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் படு விமர்சியாக நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமணத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தலைமையில் நடத்தி வைக்கப்பட்டது. சினேகன், திருமணம் செய்துள்ள கன்னிகா சமுத்திரகனியின் அடுத்த சாட்டை படத்தில் கூட நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் சினேகன் ஒரு புதிய படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன் காதல் மனைவியின் பெயரை தன் கையில் பச்சை குத்தி இருக்கிறார். அதுவும் ஆங்கிலத்தில் பெயரை பச்சை குத்தாமல் தமிழில் குத்தி தான் ஒரு தமிழ் கவிஞர் என்பதை நிரூபித்து இருக்கிறார் சினேகன்.

behindtalkies AMP · Quick view
View full