திருமணமாகி 6 மாதத்தில் பிக் பாஸ் சென்ற சினேகன் - தனிமையை போக்க கன்னிகா ரவி செய்திருக்கும் விஷயம். இதோ வீடியோ.

By Arun · 11/3/2022

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. இவர் 2500 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று. அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின் இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சியாக நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தலைமையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மேலும், நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு என்ற தொடரில் நடித்து இருக்கிறார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன்:

அதோடு தேவராட்டம், அடுத்த சாட்டை படத்தில் நடித்துள்ளார். அதே போல பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் சினேகன் நடித்து இருந்தார். தற்போது சினேகன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். இந்நிலையில் சினேகன் மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவரை பிரிந்த சோகத்தில் உருக்கமான பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், பிக்பாஸ் வீட்டிற்கு சினேகன் செல்வதற்காக கன்னிகா பேக் செய்திருக்கிறார்.

பிரிவில் கன்னிகா பதிவிட்டு உள்ள வீடியோ:

அந்த வீடியோவில் ஏப்ரல் மாதத்தில் படத்தில் இடம்பெற்ற 'பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை' என்ற பாடலை போட்டிருந்தார். திருமணமாகி ஆறு மாதத்தில் கணவனைப் பிரிந்த சோகத்தில் கன்னிகா பதிவிட்டுஇருந்தார் . மேலும், கன்னிகா பதிவிட்டு இருக்கும் ஏப்ரல் மாதத்தில் பொய் சொல்ல இந்த மனசுக்கு என்ற பாடல் சினேகன் எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல தன் கணவர் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் கன்னிகா.

View this post on Instagram

A post shared by Kannika Ravi (@kannikaravi)

தனிமையை போக்க கன்னிகா ட்ரிப் :

அதிலும் குறிப்பாக தன் கணவர் எழுதிய பாடல் வரிகளை போட்டு தன் கணவரின் பிரிவை தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறார் கன்னிகா. சினேகன் பிக் பாஸ் சென்று விட்டதால் கன்னிகா ரவி படையப்பா நீலாம்பரி போல வீட்டிலேயே இருந்து பிக் பாஸ் லைவ் 24 மணி நேரமும் பார்த்துக்கொண்டிருந்தாராம். அதை அவரே முன்பு கூறி இருந்தார். இந்நிலையில் தற்போது தனது தோழி உடன் கன்னிகா ரவி டூர் சென்று இருக்கிறர்.

பட்டத்தை வெல்வாரா சினேகன் :

இரைச்சல் இல்லாத அமைதியான சூழலை தேடி எனக்காக இரண்டு நாட்கள் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். முதல் சீசனில் கலந்துகொண்ட சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார். ஆனால், அந்த சீசனில் அவர் தான் முதல் இடம் வந்து இருக்க வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர். அதே சினேகன் கண்டிப்பாக இந்த சீசன் பைனல் வரை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது இன்னும் ஒரு சில வாரத்தில் தெரிந்துவிடும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full