4 வருசத்துக்கு முன் இதே நாளில் பிக் பாஸ் 1 ப்ரோமோவில் வந்தேன். இப்போ பிக் பாஸ் பைனலிஸ்ட் - சோம் சேகர் பகிர்ந்த புகைப்படம்.

By Rajkumar · 6/6/2021

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமில்லதாக பல்வேறு புதிய போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில்இறுதி போட்டி வரை வந்த சோம் சேகரும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சோம் சேகரின் என்ட்ரியை பார்த்த போது யார் இவர்கள் என்று தான் அனைவரின் மனதிலும் ஓடியது. ரசிகர்களுக்கு வேண்டுமானால் சோம் சேகர் புதிதான நபராக இருக்கலாம். ஆனால் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே வந்திருக்கிறாராம்.

கடந்த 2010ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.அந்த நிகழ்ச்சி விஜய்யை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. அதே போல அந்த நிகழ்ச்சியில் இவர் இறுதி போட்டி வரை வந்தார். அதன் பின்னர் இவரை விஜய் டிவியில் காண முடியவில்லை. மேலும், இவர் அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்திருக்கிறார்.

இதையும் பாருங்க : அட, ஹமாம் சோப் ஆன்டி இந்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ளாரா ? இதோ புகைப்படம்.

மேலும் .பல்வேறு விளம்பர படங்களில் கூட நடித்திருக்கிறாராம். ஆனால், இவருக்கு சின்னத்திரையிலும் சரி, வெளியிலும் சரி சரியான வாய்ப்புகள் அமையவில்லை.இதனால் தனது பாதையை கொஞ்சம் மாற்றிய சோம் சேகர் MMA எனப்படும் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் எனப்படும் குத்து சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விளையாட்டில் இருந்து வருகிறாராம் சோமசேகர்.

https://www.youtube.com/watch?v=_cs6AmFjpxY

இவர் வேலையில்லா பட்டதாரி 2, பா பாண்டி, சூரரை போற்று போன்ற பல்வேறு படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் சோம் சேகர் பிக் பாஸ் சீசன் 1 ப்ரோமோவில் நடித்துள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ஜூன் 6, 2017, நான்கு வருடத்திற்கு முன்னர் பிக் பாஸ் ப்ரோமோவில் வந்தேன் இந்த ஆண்டு பிக் பாஸ் இறுதி போட்டியாளர். வாழ்கை பல அதிசயங்களை கொண்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full