7 வருடத்திற்கு முன் எப்படி இருந்தேன் - Throwback புகைப்படத்தை பகிர்ந்த சுஜா. வியந்து போன ரசிகர்கள்.

By Arun · 1/7/2023

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுஜா வருணி. இவர் பெரும்பாலும் படங்களில் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1ல் சுஜா வருணி கலந்து கொண்டு இருந்தார். அதை தொடர்ந்து சுஜா வருணி இரண்டாவது சீசனிலும் விருந்தினராக சில நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருந்தார்.

மேலும், வித்தியாசமான கான்செப்டில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சுஜா வருணி கலந்து கொண்டு இருந்தார். இருந்தும், இதில் சுஜா இரண்டாவது வாரத்திலேயே எவிக்ஷன் ஆகி வெளியேறி இருந்தார். இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு இவருக்கும் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாருக்கும் திருமணம் நடைபெற்றது. தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார் .

சுஜா திருமணம்:

அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற சில தமிழ் படங்களில் சிவகுமார் நடித்து இருந்தார். இருந்தும் இவரால் சினிமாவில் கொடிகட்டி பறக்க முடியவில்லை. பின் சுஜா-சிவா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சுஜா படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தற்போது இவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

சுஜா-சிவா கலந்துகொண்ட நிகழ்ச்சி:

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின் சுஜா தன் கணவருடன் சேர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு இறுதியில் வெற்றிகரமாக முடிவடைந்த பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இதில் சுஜா-சிவா நடனம் வேற லெவெலில் இருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அமீர்-பாவனி டைட்டில் வென்றார்கள்.

சுஜா நடித்த கடைசி படம்:

இரண்டாம் இடத்தை சிவா – சுஜா பிடித்து இருக்கின்றனர். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து இருந்தார். அதோடு கடந்த 2019 ஆம் ஆண்டு சத்ரு என்ற திரைப்படத்தில் சுஜா இறுதியாக நடித்திருந்தார். பின்னர் மூன்று வருடங்கள் கழித்து தெலுங்கு சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருந்தார். அப்போது இவர் த்ருஷ்யம் 2 திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

சுஜாவின் லேட்டஸ்ட் அப்டேட்:

பின் திரைப்படங்கள் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் இவர் டிவி நிகழ்ச்சியில் சுஜா பங்கேற்று வருகிறார். அதேபோல் சுஜா சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கிறார். அதில் இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படம், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் சுஜாவின் கவர்ச்சி போட்டோ ஒன்று ரசிகர்களை திக்குமுக்காட வைத்து இருக்கிறது. அதாவது, தற்போது சுஜா 7 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை தான் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full