முதன் முறையாக தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட சுஜா.!

By Rajkumar · 24/8/2019

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இவருக்கும் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாருக்கு திருமணம் நடைபெற்றது. தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார் . அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

திருமணமான சில மாதங்களிலேயே சுஜா வாருணி கருவுற்று இருந்தார். மேலும், இவரது சீமந்த புகைப்படங்களை கூட அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த புதன் கிழமை ஆகஸ்ட் 21 ஆம் தேதி சுஜா வருணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

https://www.instagram.com/p/B1gnjColcAV/?igshid=11c1gy7v0hnvy

இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள அவரது கணவர் என்னுடைய சிம்ஹா பிறந்துவிட்டான் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் சுஜா மற்றும் சிவகுமார் தனது குழந்தையுடன் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை முதன் முறையாக வெளியிட்டுள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full