அட, சுரேஷ் சக்ரவர்த்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல்ல நடிச்சிருக்காரா ? வீடியோவை பாருங்க.

By Rajkumar · 11/10/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக ஒரு வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு நடிகர் நடிகைகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் பல ரசிகர்களுக்கு தெரியாத ஒரு நடிகர் என்றால் அது சுரேஷ் சக்கரவர்த்தி தான். ஆரம்பத்தில் இவர் கொஞ்சம் தெளிவாக தெரிந்தாலும் தற்போது இவர் பிக் பாஸ் வீட்டில் செய்துவரும் சேட்டைக்கு அளவே இல்லை.

இவரை ஒரு சிலருக்கும் தெரிந்து இருக்கும் ஒரு சிலருக்கு தெரிந்து இருக்காது. இவரும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தான். இவர் விசு, எஸ் பி பி என்று பல்வேறு ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். மேலும், இவர் தனது 19 வயதிலேயே ராமா நாயுடுவின் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் புது நகைச்சுவை நடிகரா அறிமுகமானார். அந்த படத்தில் எஸ் பி பியும் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தமிழில் ஜி.வியின் தயாரிப்பில், கே.சுபாஷ் இயக்கத்தில் "வாக்குமூலம்" என்றபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அழகன் படத்தில் வரும் அதிராம்பட்டி சொக்கு கதாபத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் இவர் சொர்ணரேகை என்ற பாலச்சந்தரின் தொடரிலும் நடித்தார். அந்த தொடரை இயக்கியவர் எம் எஸ் பாஸ்கர் என்பது கூடுதல் சிறப்பு.

வீடியோவை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் : https://www.youtube.com/watch?v=dTWBAQpB5SA

சீனியர் நடிகர்கள் லிஸ்டில் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் அறிமுகமான நடிகர் சுரேஷ் இடம்பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியானது. வெள்ளை ரோஜா, புது வசந்தம், தாலி புதுசு, அவள், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வந்த சுரேஷ் சன் டிவி, ஜெயா டிவி என்று பல சீரியல்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலிலும் நடித்துள்ளார். இதோ அந்த வீடியோ.

Tamil Behind Talkies AMP · Quick view
View full