அப்போதே ரஜினியை பேட்டி எடுத்துள்ள சுரேஷ் சக்ரவர்த்தி - எந்த படத்தின் போதுனு பாருங்க.

By Rajkumar · 29/10/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசனில் சோமசேகர், பாலாஜி முருகதாஸ் போன்ற ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத போட்டியாளர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தியும் ஒரு சிலருக்கு தெரிந்த முகமாக இருந்தாலும் பலருக்கு இவரைப்பற்றி தெரியாமல்தான் இருந்தது. ஆரம்பத்தில் இவரை அனைவருமே ஒரு டெரரான பீஸ் என்றுதான் நினைத்தார்கள். அதேபோல இவர் இந்த சீசன் வனிதா என்றும் பலரும் விமர்சித்து வந்தார்கள்.

ஆனால் போகப்போக இவர் செய்யும் சேட்டைகளை பார்த்து இவருக்கு என்று ஒரு தனி ஆர்மியே அமைந்துவிட்டது. என்னதான் ஒரு சில நேரத்தில் மற்ற போட்டியாளர்களை வேண்டுமென்றே வம்பு இழுந்தாலும் டாஸ்க் என்று வந்துவிட்டால் சுரேஷ் மற்ற போட்டியாளர்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோல தான் செய்யும் தவறுகளை மிகவும் நேர்மையாக ஒப்புக் கொள்கிறார் இதனாலேயே இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகிறது. சுரேஷும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தான். இவர் விசு, எஸ் பி பி என்று பல்வேறு ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார்.

மேலும், இவர் தனது 19 வயதிலேயே ராமா நாயுடுவின் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் புது நகைச்சுவை நடிகரா அறிமுகமானார். அந்த படத்தில் எஸ் பி பியும் நடித்திருந்தார்.அதன் பின்னர் தமிழில் ஜி.வியின் தயாரிப்பில், கே.சுபாஷ் இயக்கத்தில் "வாக்குமூலம்" என்றபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அழகன் படத்தில் வரும் அதிராம்பட்டி சொக்கு கதாபத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் இவர் சொர்ணரேகை என்ற பாலச்சந்தரின் தொடரிலும் நடித்தார். அந்த தொடரை இயக்கியவர் எம் எஸ் பாஸ்கர் என்பது கூடுதல் சிறப்பு. மேலும், இவர் தொகுப்பளராக பணியாற்றி இருக்கிறார்.

அர்ச்சனா, பிக் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளில் சுரேஷ் சக்ரவர்த்தியிடம் நீங்கள் ஏன் ஆன்கராகவில்லை என்று கேட்டிருந்தார். அப்போது சுரேஷ் சக்ரவர்த்தி நானும் ஒரு காலத்தில் ஆன்கராக இருந்தவர் தான் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி ரஜினியை பேட்டி எடுத்த ஒரு புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது இது ரஜினி நடித்த அண்ணாமலை படத்தின் போது எடுத்த புகைப்படம் என்று தான் தோன்றுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full