அட, சுரேஷ் சக்ரவர்த்தி மகனா இது இப்பபோ எப்படி இருக்கார் பாருங்க - அவரே பதிவிட்ட புகைப்படம்.

By Rajkumar · 19/11/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாகஆறு வாரத்தை வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசனில் சோம் சேகர், பாலாஜி முருகதாஸ் போன்ற ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத போட்டியாளர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தியும் ஒரு சிலருக்கு தெரிந்த முகமாக இருந்தாலும் பலருக்கு இவரைப்பற்றி தெரியாமல்தான் இருந்தது.

ஆரம்பத்தில் இவரை அனைவருமே ஒரு டெரரான பீஸ் என்றுதான் நினைத்தார்கள். அதேபோல இவர் இந்த சீசன் வனிதா என்றும் பலரும் விமர்சித்து வந்தார்கள்.ஆனால் போகப்போக இவர் செய்யும் சேட்டைகளை பார்த்து இவருக்கு என்று ஒரு தனி ஆர்மியே அமைந்துவிட்டது. என்னதான் ஒரு சில நேரத்தில் மற்ற போட்டியாளர்களை வேண்டுமென்றே வம்பு இழுந்தாலும் டாஸ்க் என்று வந்துவிட்டால் சுரேஷ் மற்ற போட்டியாளர்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தார் . அதேபோல தான் செய்யும் தவறுகளை மிகவும் நேர்மையாக ஒப்புக் கொள்கிறார் இதனாலேயே இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகிறது.

சுரேஷும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தான். இவர் விசு, எஸ் பி பி என்று பல்வேறு ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார்.மேலும், இவர் தனது 19 வயதிலேயே ராமா நாயுடுவின் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் புது நகைச்சுவை நடிகரா அறிமுகமானார். அந்த படத்தில் எஸ் பி பியும் நடித்திருந்தார்.அதன் பின்னர் தமிழில் ஜி.வியின் தயாரிப்பில், கே.சுபாஷ் இயக்கத்தில் "வாக்குமூலம்" என்றபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அழகன் படத்தில் வரும் அதிராம்பட்டி சொக்கு கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

பின்னர் இவர் சொர்ணரேகை என்ற பாலச்சந்தரின் தொடரிலும் நடித்தார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் பிற சக்கரவர்த்தி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full