Bigg Boss Tamil 3: வெளியானது பிக் பாஸ் போட்டியாளர்களின் விவரம்.! முழு லிஸ்ட் இதோ.!

By ·

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை (ஜூன் 23)துவங்க இருக்கிறது. ஞாயிற்று கிழமை 8 மணிக்கு கோலாகலமாக இந்த நிகழ்ச்சி தூங்க இருக்கிறது. கடந்த சில வாரங்களாக 2 ப்ரோமோக்களை மாறி மாறி ஒளிபரப்பி வந்த விஜய் டிவி தற்போது அடுத்தடுத்து ப்ரோமோகளை வெளியிட்டு வருகிறது.

https://www.youtube.com/watch?v=CGN7xfG4HGk

இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்த ஜாங்கிரி மதுமிதா மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளார். மற்ற போட்டியாளர்கள் பற்றிய விவரங்களை பிக் பாஸ் குழு வெளியில் கசிந்து விடாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஜாங்கிரி மதுமிதாவை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகரும், கர்நாடக இசை கலைஞருமான மோகன் வைத்யா கலந்துகொள்ள போவதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. பாடகரான மோகன் வைத்யா தமிழில் அந்நியன், சேது உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோ ஒன்றையும் விஜய் டிவி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் ஒரு வழியாக இந்த நிகழ்ச்சியில் பங்குபெற போகும் போட்டியாளர்களை பற்றிய முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் 8 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

  1. நடிகை அபிராமி
  2. மோகன் வைத்யா
  3. ஜாங்கிரி மதுமிதா
  4. வனிதா விஜயகுமார்
  5. பருத்திவீரன் சரவணன்
  6. சாண்டி மாஸ்டர்
  7. சாந்தினி தமிழரசன்
  8. கவின்
  9. ஷெரின்
  10. தர்சன்
  11. பாத்திமா பாபு
  12. சாக்ஷி அகர்வால்
  13. சேரன்
  14. பவர் ஸ்டார்
  15. சரண் சக்தி
  16. முகுன் ராவ்
Tamil Behind Talkies AMP · Quick view
View full