Bigg Boss Tamil 3: கன்பெஷன் ரூமில் கமல்ஹாசன், பலே ப்ரோமோஷன்.! புகைப்படம் இதோ.!

By Rajkumar · 22/6/2019

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நாளை (ஜூன் 23) துவங்க இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் நாளை 8 மணிக்கு பிரம்மாண்ட ஆரம்ப விழாவுடன் துவங்க இருக்கிறது.

இந்த ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட செட் சென்னை பூந்தமல்லி சாலையில் அமைந்துள்ள ஈ வி பியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீசனையும் கடந்த இரண்டு சீசனை போல உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நேற்று (ஜூன் 21) துவங்கப்பட்டது. இந்த ஷூட்டிங்கில் உலக நாயகன் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை நமது இனையதளத்திலும் பதிவிட்டிருந்தோம். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டினுள் கமல் இருக்கும் மற்றுமொரு புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் நடிகர் கமல் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களை அழைத்து பிக் பாஸ் பேசும் கன்பெஷன் ரூமில் அமர்ந்தவாரு இருக்கிறார். கடந்த இரண்டு சீசன்களாக நாம் கண்ட கன்பெஷன் ரூமை விட இந்த கன்பெஷன் ரூம் சற்று வித்யாசமாகவே காட்சியளிக்கிறது.

தங்க நிறத்தால் ஆன நாற்காலிக்கு பின்னால் நிறைய வண்ணங்கள் கொண்ட புகைப்படங்களும் காணப்படுகிறது. மேலும், அந்த அறையின் பக்கவாட்டில் சில அலமாரிகளும் அமைக்கபெற்றுள்ளது. கன்பெஷன் ரூமே இ[அப்படி வித்யாசமாக அமைப்பற்றுள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில மாற்றங்களும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full