Bigg Boss Tamil 3 : வெளியானது பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்கள்.! எப்படி இருக்குன்னு பாருங்க.!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்று (ஜூன் 23) துவங்க இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் இன்று இரவு 8 மணிக்கு பிரம்மாண்ட ஆரம்ப விழாவுடன் துவங்க இருக்கிறது.
இந்த ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட செட் சென்னை பூந்தமல்லி சாலையில் அமைந்துள்ள ஈ வி பியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீசனையும் கடந்த இரண்டு சீசனை போல உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோ ஒன்றையும் விஜய் டிவி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் ஒரு வழியாக இந்த நிகழ்ச்சியில் பங்குபெற போகும் போட்டியாளர்களை பற்றிய முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் 8 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில்
- நடிகை அபிராமி
- மோகன் வைத்யா
- ஜாங்கிரி மதுமிதா
- வனிதா விஜயகுமார்
- பருத்திவீரன் சரவணன்
- சாண்டி மாஸ்டர்
- சாந்தினி தமிழரசன்
- கவின்
- ஷெரின்
- தர்சன்
- பாத்திமா பாபு
- சாக்ஷி அகர்வால்
- சேரன்
- பவர் ஸ்டார்
- சரண் சக்தி
- முகுன் ராவ்
ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்கள் சில நமக்கு கிடைக்கபெற்றுள்ளது. பிக் பாஸ் வீட்டின் நுழைவு, கிட்சன் ரூம், கார்டன் ஏரியா. கன்பெசன் ரூம் ஆகியவற்றின் புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த புகைப்படங்களை பார்க்கும் போது கடந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் பல மாற்றங்களை செய்துள்ளனர்.