பிக் பாஸ் முகென் குடும்பத்தில் நேர்ந்த இழப்பு. கடும் சோகத்தில் முகென்.

By Rajkumar · 28/1/2020

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் பட்டத்தை வென்ற முகன் ராவின் தந்தை காலமாகியுள்ளதாக வெளியான செய்தி பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் முகென், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் அடக்கம். இதில் முகென் ராவ் தமிழ் ரசிகர்கள் சிலருக்கு தெரியவும் வாய்ப்பு இருகிறது.

மலேசியாவை சேர்ந்த இவர், ஒரு ஹிப் ஹாப் பாடகராவார். இதுவரை மலேசியாவில் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இவருக்கென்று மலேசியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் தமிழிலும் ஒரு ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதே போல இவரது ஒரு சில ஆல்பம் பாடல்கள் இந்தியாவிலும் கொஞ்சம் பிரபலம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் இவருக்கு மலேசியாவில் இருந்து பல்வேறு ஆதரவுகள் குவிந்து வந்தது .

இதையும் பாருங்க : டயானா என்ற பெயரை நயன்தாரா என்று மாற்றியது இவரு தானாம். அவரே வெளியிட்ட தகவல்.

இவருக்கென்று மலேசிய மக்கள் பல்வேறு ஆர்மியை கூட சமூக வலைத்தளங்களில் துவங்கி இருக்கின்றனர். இந்தநிலையில் முகென் ராவ்வின் தந்தையான பிரகாஷ் ராவ் நேற்று (செவ்வாய் கிழமை, ஜனவரி 27) காலமாகி இருக்கிறார். பிரகாஷ் ராவ், நேற்று மாலை 6 20 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமாகி இருக்கிறார். அவருடைய வயது 52. முகென் ராவின் தந்தை காலமானதையொட்டி அவரது நண்பர்களும் பிக்பாஸ் போட்டியாளர்களும் வருத்தத்தையும், ஆறுதலையும் கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகேன் ராவை காதலித்த அபிராமி , முகென் ராவ்வின் தந்தையின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல நடிகையும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகையுமான வனிதாவும் முகென் ராவ்வின் தந்தையின் மறைவிற்கு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். முகேன் ராவ் தந்தையின் இறுதிச் சடங்கு இன்று (ஜனவரி 28)நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Tamil Behind Talkies AMP · Quick view
View full