கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்று சென்று கொண்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்வில் நடத்த சோகங்களையும் மறக்க முடியாத சம்பவங்கள் குறித்து கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஆரி பேசுகையில் தனது வீட்டில் அனைவருமே படித்து ஓரளவிற்கு செட்டில் ஆகி விட்டார்கள் ஆனால் நான்தான் படிப்பு வராமல் அப்படியே அழுத்தி கொண்டு இருந்தேன் அப்போது எனது தந்தை எனது சிறு பகுதியை விற்று ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து என்னை சென்னைக்கு வழி அனுப்பி வைத்தார்.

அதன் பின்னர் சென்னையில் ஒரு மஞ்சப் பையோடு வந்து இறங்கிய நான் பின்னர் சினிமாவில் எப்படியோ வாய்ப்பைத் தேடி அலைந்து கொண்டிருந்த சமயத்தில் சேரன் மூலமாக எனக்கு பட வாய்ப்பு வந்திருந்தது . அப்போது சேரன் சாருக்கு நான் போன் செய்து இந்த படத்தில் எனக்கு என்ன கதாபாத்திரம் என்று கேட்டேன். அதற்கு அவர், ஏன் சொல்லி ஆகணுமா நீ தான் இந்த படத்தின் ஹீரோ என்று சொன்னார். அந்த படத்தின் பெயர் ‘ஆடும் கூத்து’ அந்த படம் சிறந்த தமிழ் மொழிக்கான தேசிய விருதை பெற்றது. ஆனால் அந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. என்னுடைய முதல் படமே திரையரங்கில் வெளி வராமல் போனது மிகவும் வருத்தமான விஷயம் என்று கூறியிருந்தார் ஆரி.

Advertisement

அதன் பின்னர் என்னுடைய தந்தை இறந்துவிட்டார். தந்தை இறந்த பின்னர் என்னுடைய அம்மா என்னை கவனித்துக்கொள்ள சென்னைக்கு வந்து விட்டார். என்னுடைய அம்மாதான் என்னை ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டால் அவருக்கு உணவு இல்லை என்றாலும் எனக்கு அவர் நல்ல உணவை தான் போடுவார் பையன் சினிமாவில் நடிக்கிறார் அதனால் அவன் நன்றாக காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று அவருக்கு இல்லை என்றாலும் என்னை ஊட்டி வளர்த்தார்.

ஒரு முறை திடீரென்று என்னுடைய அம்மா எழுந்து அப்பா எங்கே என்று அலைந்து கொண்டிருந்தார் எனக்கு ஒன்றுமே புரியவில்லை பின்னர் ஏன் என்று கேட்டதற்கு தூக்கத்தில் உன் அரிதாக சொல்லிவிட்டார் அப்போதுதான் தெரிந்தது என்னுடைய அம்மாவிற்கு பார்க்கின்சன் நோய் இருக்கிறது என்று அந்த நோய் வந்தால் நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாது கைகால்கள் எல்லாம் சரியாக வேலை செய்யாது.

Advertisement

என்னுடைய அம்மா பின்னர் ஒருமுறை ஒரு பட வாய்ப்பிற்காக என்னை சந்திக்க ஒருவர் வீட்டுக்கு வந்த போது மாடியில் இருந்து நடந்து வந்த போது என் அம்மா நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். அப்போது அவருக்கு பின் மண்டையில் அடிபட்டு விட்டது அதன் பின்னர் அவர் ஒரு குழந்தை போல மாறி விட்டார். ஒரு முறை நான் நாகேஷ் திரையரங்கம் கடைசி நாள் படப்பிடிப்பில் இருந்தபோது என்னுடைய அம்மா இறந்து விட்டதாக செய்தி வந்தது ஆனால் அன்று தான் படப்பிடிப்பின் கடைசி தினம் 25 லட்சம் ரூபாய் செலவு செய்து படப்பிடிப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். என்னால் அவை வீணாகக் கூடாது என்பதற்காக படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னர் விடிகாலையில் சென்று என் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன் என்று கூறியிருந்தார் ஆரி இது அவரது அம்மாவின் புகைப்படம்.

Advertisement
Advertisement