இறுதி போட்டியில் ரம்யா பாண்டியன் எத்தனையாவது இடம் தெரியுமா ? அதிர்ச்சியில் ரம்யா ரசிகர்கள்.

By ·

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே.

கடந்த வியாழக்கிழமை நிகழ்ச்சியில் கேப்ரில்லா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.இந்த சீசனில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நபர்களில் கேப்ரில்லா மற்றும் சோம் சேகர் இருவருக்கும் மூன்றாம் இடம் கிடைப்பது கூட சந்தேகமே. எனவே, கேப்ரில்லாவின் இந்த முடிவை பலரும் பாராட்டி இருந்தனர். இந்த சீசனில் ரம்யா பாண்டியனுக்கு முதல் மூன்று இடமாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவருக்கு கடைசி மூன்று இடம் கூட கிடைக்கவில்லை என்று நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.அதே போல இந்த சீசனில் ஆரி தான் தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிக வாக்குகளை பெற்று முதல் இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தது யார் என்ற விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full