பிக் பாஸ் உள்ளையும் இதே தானா ? ஷிவானி உடையை கலாய்க்கும் மீம் - எப்படி தான் நோட் பண்றாங்களோ.

By Rajkumar · 6/10/2020

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசன் கடந்த(அக்டோபர் 4) ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. சென்ற சீசனை போல இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத நபர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான ஒரு போட்டியாளர் தான் ஷிவானி. இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் அறியப்பட்டவர்.

https://www.instagram.com/p/CFmdk3dHxbk/?igshid=oshkv1q1t0yx

ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ சமூக வலைதளம் தான். கடந்த சில மாதங்களாகவே சிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். அதிலும் மாலை 4 மணி 5 மணி என்று குறிப்பிட்ட சமயத்தில் இவர் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இதனாலேயே இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்து. இவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

ஆனால், இன்ஸ்டாகிராமில் இவருக்கும் கிடைத்த ஆதரவு பிக் பாஸ் போட்டியாளர்களிடன் கிடைக்கவில்லை. சென்ற முதல் நாளே இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் மனஸ்தாபம் வந்தது. அதே போல சுரேஷ் சக்கரவர்த்தி கூட ஷிவானியிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டார். அவ்வளவு ஏன் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் டாஸ்க் ஒன்றைகொடுத்திருந்தார். அதில் பிக்பாஸ் வீட்டில் இந்த ஒரு நாளில் தங்களை மிகவும் கவர்ந்த போட்டியாளர்களுக்கு ஹார்ட் சிம்புலையும் மேலும் தங்கள் மனதை புண்படுத்திய அல்லது காயப்படுத்திய போட்டியாளர்களுக்கு ஹார்ட் பிரேக் சிம்புலயும் குத்துமாறு கூறியிருந்தார்.

https://www.instagram.com/p/CF9rVtwhvMu/?igshid=x8j0sukzih5u

இதில் அதிக ஹார்ட் பிரேக்கை வாங்கியிருந்தார் சிவானி.ஷிவானிக்கு ஆறுதலாக கேப்ரில்லா மட்டும் ஹார்ட் கொடுத்தார்.இப்படி ஒரு நிலையில் ஷிவானி பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இரண்டாம் நாள் காலை போட்டியாளர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு இருந்தார். அப்போது ஒரு நீல நிற அரை ட்ராயாரை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டார். ஆனால், ஷிவானி பிக் பாஸிற்கு முன் தனிமைபடுத்தப்பட்ட போது வெளியிட்ட அதே ட்ராயரை தான் பிக் பாஸ் வீட்டிலும் போட்டுகொண்டு உள்ளார் என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full