விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் டெலிகாஸ்ட் ஆகி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நான்கு சீசன்களை கடந்து தற்போது பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி கடந்த மாதம் தான் கோலாகலமாக தொடங்கப்பட்டது. மேலும், இந்த ஐந்து சீசன்களையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்நிலையில் கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ள தகவல் வெளியாகி இருப்பதால் பிக்பாஸ் நிலைமை என்ன? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பிக் பாஸ் நாயகன் கமலஹாசன் அவர்கள் தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக சென்றிருந்தார். அப்போது அவருக்கு லேசான காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பின் கமலுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்து கமலஹாசன் அவர்கள் டீவ்ட் ஒன்று போட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, அமெரிக்க பயணம் முடிந்து திரும்பிய பின் எனக்கு லேசான இரும்பல் இருந்தது. பரிசோதனை செய்த பிறகு கொரோனா பாசிட்டிவ் உறுதியானது. உடனே நான் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளேன். இன்னமும் நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். கவனமாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த டீவ்ட் சோஷியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

இதனிடையே 50 வது எபிசோடில் கலந்துகொள்வதற்காக கமலஹாசன் அவர்கள் அமெரிக்காவில் இருந்து நேரடியாக விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது. அதோடு இந்த எபிசோடின் படபிடிப்பு ஒரு தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் கமலஹாசனுடன் நிகழ்ச்சியில் இருந்தவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கமலஹாசனுடன் அருகிலிருந்த இசைவாணி, சூட்டிங் பார்க்க வந்த பார்வையாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏன்னா, இவர்களுக்கும் கொரோனா பரவ வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.

மேலும், கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் வரும் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஷூட்டிங்கில் அவர் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. சென்ற வாரம் எவிக்ஷன் எபிசோடை முடித்துவிட்டு தான் கமலஹாசன் அமெரிக்கா சென்றிருக்கிறார். இந்த நிலையில் கமலஹாசன் தனிமைப்படுத்தி இருப்பதால் சூட்டிங் என்னாகும் என்று பல கேள்விகள் சோசியல் மீடியாவில் எழுந்தவண்ணம் உள்ளன. இது குறித்து சேனல் தரப்பில் விவாதமும் போய்க்கொண்டிருக்கிறது. அவர்கள் கமல் சாரிடம் கலந்து ஆலோசித்து தான் எந்த ஒரு முடிவையும் எடுப்பதாக கூறி இருக்கிறார்கள்.

Advertisement

இது ஒரு பக்கம் இருக்க, இந்த வாரம் எவிக்ஷன் மட்டும் இல்லாமல் வழக்கம் போல் அந்த 2 நாட்களும் நடக்கிறதை ஒளிபரப்பலாம் அல்லது கமல் வீட்டிலிருந்தே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒளிபரப்பலாம் என்று இரண்டு கோணத்தில் விஜய் டிவி பிக் பாஸ் குழு தீவிர ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த சூழ்நிலையில் மூன்றாவதாக ஒரு திட்டமும் கூறியிருக்கிறார்கள். அதாவது கமலுக்கு பதில் சிறிது காலம் வேறு ஒருவரை தொகுத்து வழங்க வைப்பது குறித்தும் யோசித்து வருகிறார்கள். விஜய் டிவி பிக் பாஸ் குழு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

Advertisement
Advertisement