கடந்து வந்த பாதை டாஸ்கில் தனக்கு திருமணமானதை மறைத்த இசைவாணி - இவர் தான் அவரின் கணவர்.

By Rajkumar · 9/10/2021

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்தமுறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களை செய்து உள்ளார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்து நாட்கள் முடிவடைந்த நிலையில் போட்டியாளர்களுக்குள் லைட்டாக புகைய ஆரம்பித்து இருக்கிறது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் கடந்து வந்த துயரங்களையும் கஷ்டங்களையும் சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் போட்டியாளர்களில் ஒருவராக திகழும் இசை வாணியும் தன்னுடைய வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார். இவர் வடசென்னை பூர்வீகமாகக் கொண்டவர்.

இவரை அனைவரும் கானா இசைவாணி என்றுதான் அழைப்பார்கள். தனக்கு உரிய கானா பாடலின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் இசை. மேலும், 'பெரிய கறி’ என்ற பாடலை பாடியதன் மூலம் இசை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பெண்கள் கால்பதிக்க தயங்கும் கானா இசை துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பது துறையில் இவருடைய கனவு, லட்சியம். அதுமட்டும் இல்லாமல் 2020 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய கானா திறமையை வெளிப்படுத்தி உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக இசையை தேர்வு செய்து பெருமைப்படுத்தியது பிபிசி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் நிகழ்ச்சியில் தான் மிக கஷ்டமான சூழலில் வளர்ந்ததாகவும், தங்குவதற்கு வீடு இல்லாமல், உணவில்லாமல் வாழ்ந்ததாகவும் கண்ணீருடன் பேசினார். இவருடைய பேச்சை கேட்டு பிற போட்டியாளர்களும் அழுதார்கள். பின் இவர் பவானி ரெட்டியுடன் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது பவானி ரெட்டி தன்னுடைய கணவரின் இறப்பைப் பற்றி பேசினார். அதைக்கேட்ட இசைவாணி அவளைத் தேற்றும் விதமாக தன்னுடைய திருமண முறிவை பற்றி அவரிடம் மட்டும் ரகசியம் சொன்னார்.

இந்த விஷயத்தை தன்னைப் பற்றி கூறும் போது இசை மறைத்து விட்டார். மேலும், இவர் தன்னுடைய திருமண வாழ்க்கைக்கு குறித்து பிக் பாஸ் வீட்டில் பேசத் தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் இவர்தான் இசை வாணி கணவரா? ஏன் இவர்கள் பிரிந்து விட்டார்கள்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full