இந்த வாரம் மட்டுமல்ல இன்னும் இத்தனை வாரங்களுக்கு நான் தான் host - ரம்யா கிருஷ்ணன்.

By subhashini · 28/11/2021

விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் டெலிகாஸ்ட் ஆகி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நான்கு சீசன்களை கடந்து தற்போது பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி கடந்த மாதம் தான் கோலாகலமாக தொடங்கப்பட்டது. மேலும், இந்த ஐந்து சீசன்களையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்நிலையில் கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ள நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் வரும் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஷூட்டிங்கில் அவர் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து சேனல் தரப்பில் விவாதமும் போய்க்கொண்டிருந்தது. ஆனால், கமல் கண்டிப்பாக கொரோனா தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் இருக்கும் சூழல் ஏற்பட்டது.

அதே போல கமலின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள் கோவிட் சூழலில் தொடர்ந்து பேசுவது தொண்டைக்கு நல்லதல்ல என்று அறிவுரை கூறி இருக்கின்றனர். அதே போல விர்ச்சுவலில் நிகழ்ச்சியை ஒளிபரப்பினால் சில டெக்கனிகள் பிரச்சனைகள் எழலாம் என்பதால் இந்த முடிவை விடுத்து, தற்போது கமலுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணனனை இறக்கினர்.

நேற்றய நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனை பிக் பாஸ் தொகுப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார் கமல். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் மட்டுமல்ல அடுத்த வாரமும் நான் தான் பிக் பாஸை தொகுத்து வழங்கவேண் என்று ரம்யாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார். எனவே அடுத்த வாரமும் கமலை பிக் பாஸ் மேடையில் காண முடியாது.

behindtalkies AMP · Quick view
View full