தாமரை செல்வியின் மேடை ஆட்டத்தை பார்த்துள்ளீர்களா - என்ன ஆட்டம்டா எப்பா. வைரலாகும் வீடியோ.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த 3ஆம் தேதி துவங்கியது. கடந்த 4 சீசன்களை விட இந்த சீசனில் தான் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல முது முக போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தாமரை செல்வியும் ஒருவர், மேடை நாடக கலைஞரான இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார்.
https://www.youtube.com/watch?v=ZI1Cu5w80C0&feature=youtu.be
ஆனால், இரண்டாவது நாளே இவருக்கும் நமீதா மாரிமுத்துவிற்கும் சில வாய் சண்டை வெடித்தது. சொல்லப்போனால் இவருடன் சாண்டையிட்டு தான் நமீதா மாரிமுத்து வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது. பிக் பாஸின் இந்த வார தலைவராக தாமரை செல்வி தான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்.
இதையும் பாருங்க : எப்படி இருக்கிறது ஜோதிகாவின் 50வது படம் 'உடன் பிறப்பே' - முழு விமர்சனம் இதோ.
இந்த நிலையில் நேற்றய எபிசோடில் கடந்து வந்த பாதை டாஸ்கில் பேசிய தாமரை தன் குடும்பத்தினராலும் கணவராலும் அனுபவித்த கஷ்டங்களை பற்றி கூறியிருந்தார். வறுமை காரணமாக சிறு வயதிலேயே தாமரை செல்வியை நாடகத்தில் சேர்த்துவிட்டுள்ளனர். அதன் பின்னர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=U5wFTFoST6Q&t=195s
அவருடன் ஒரு மகனையும் பெற்றுள்ளார் தாமரை. அந்த வாழ்க்கை பிரச்னையில் முடியவே வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டார். தற்போதும் தனது பிள்ளைகளுக்காக தான் நாடகத்தில் நடித்து வருகிறார் தாமரை. இப்படி ஒரு நிலையில் தாமரை மேடை நாடகத்தில் ஆட்டம் போட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.