அட, ஜனனிக்கு ஒரு தங்கை இருக்காரா - புத்தாண்டில் தன் தங்கையுடன் புகைப்படத்தை வெளியிட்ட ஜனனி.

By Arun · 1/1/2023

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இளசுகளின் மனதை கவர்ந்த ஜனனி தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 82 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருந்தனர்.

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து தற்போது 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் ஜனனி. இந்த சீசனில் ரசிகர்களுக்கு தெரியாத புது முகங்களில் ஜனனியும் ஒருவர். இவர் இலங்கை தமிழ் பெண். இவர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர்.குறிப்பாக, இவர் த்ரிஷாவின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் பிரப பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் சார்ந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஜனினுக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்து இருக்கிறது.நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது. இதனால் இவருக்கு இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், நிகழ்ச்சியில் இவர் அமுதவாணனின் கை பாகையாக இருந்தார்.

நிகழ்ச்சி ஆரம்பம் முதலே இவர் அமுதவாணன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்துவந்தார். இவருக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அமுதவாணன் வான்டட் ஆக ஆஜராகி வந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இவரது வெளியேற்றம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஜனனி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் '' நான் எப்படியோ என்னை பிபி வீட்டிற்குள் அப்படியே ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி!! உங்கள் வாக்குகளால் நீங்கள் அனைவரும் என்னை பெரிய அளவில் ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். இந்த நாட்களுக்குள் உங்களது எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் மன்னிக்கவும்' என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இன்று புத்தாண்டில் தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படங்களை ஜனனி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full