பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் சம்பள லிஸ்ட் - இருப்பதிலேயே அதிக சம்பளம் யாருக்கு தெரியுமா?

By ·

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வாங்கும் சம்பள விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 95 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. மிகவும் மொக்கையான டாஸ்க்குகளுடன் நடந்த இந்த Ticket To Finale டாஸ்க்கின் இறுதியில் விஷ்ணு வெற்றி பெற்றார். இந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் துவங்கி இருந்தது.

பிக் பாஸ் 7:

இதில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் யார் செல்வார்கள்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்த நிலையில் பூர்ணிமா 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார். இந்த வாரம் விஷ்ணுவை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் இருக்கின்றனர். இதில் மணி, பூர்ணிமா, விஜய் வர்மா ஆகிய மூன்று பேரில் யாராவது ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்ட நிலையில் பூர்ணிமாவின் இந்த முடிவை பலர் பாராட்டி வருகின்றனர்.

சம்பளம் விவரம்:

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கலந்துகொண்ட போட்டியாளர்களின் சம்பள பட்டியல் தான் வெளியாகி இருக்கிறது. அதில், விசித்ரா தான் இந்த சீசனிலேயே அதிகம் சம்பளம் வாங்கியவர். இவர் ஒரு நாளைக்கு 30000 சம்பளம். காரணம், சீனியர் நடிகை என்பதால் இவருக்கு இவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் குக் வித் கோமாளி சீசன் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பும் கிடைத்தது.

விஷ்ணு, யுகேந்திரன், கானா பாலா, ரவீனா சம்பளம்:

விஷ்ணு, யுகேந்திரன், கானா பாலா, ரவீனா ஆகியோருக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. யுகேந்திரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே மலேசியாவில் இருந்து சென்னை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் மாயா, பிரதீப், தினேஷ் ஆகிய மூவருக்குமே ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இவர்கள் மூவருமே கன்டென்ட் போட்டியாளர்களாகவே கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

குறைவான சம்பளம் வாங்கியவர்கள்:

தினேஷ் இறுதிவரை தொடர்வார் என்று கூறப்படுகிறது. கூல் சுரேஷ், வினுஷா தேவி ஆகியோருக்கு ஒரு நாளைக்கு 15,000 சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. பூர்ணிமா, ஐசு, மணி, சரவண விக்ரம், அக்ஷயா, விஜய் வர்மா ஆகியோருக்கு ஒரு நாளைக்கு 15000 சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. மேலும், இந்த சீசனிலேயே குறைவான சம்பளம் வாங்கியவர்கள் என்றால் ஜோவிகா, நிக்ஸன், அனன்யா தான். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full