ஒன்னில்ல ரெண்டில்ல இந்த முறை இத்தனை Wildcard போட்டியாளர்கள் - அப்போ இந்த வாரம் டபுள் எலிமிநேஷனா?

By Arun · 23/10/2023

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்று வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார்.பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். தற்போது 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

மேலும், கடந்த வாரத்திற்கான நாமினேஷனில் நிக்சன்,அக்ஷயா,மணி சித்ரா, ஐசு,விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா,விக்ரம் மற்றும் பிரதீப் ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு இருந்தார்.

விஜய் வர்மாவின் வெளியேற்றம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம் கடந்த வாரம் அவரை விட வீட்டில் சும்மா இருக்கும் பல மிகசர் போட்டியாளர்கள் எல்லாம் நாமினேஷனில் இடம்பெற்றனர். அவர்களை விட விஜய் வர்மா பிக் பாஸில் ஒரு கண்டன்ட் கொடுக்கும் போட்டியாளராகவே இருந்தார். இதனால் கண்டிப்பாக அவர்களை விட விஜய் வர்மாவிற்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்து இருக்கும்.

https://twitter.com/storytimewithk/status/1716340174399983867?s=48

அப்படி இருக்கும் பட்சத்தில் விஜய் வர்மா வாக்குகள் அடிப்படையில் வெளியேறினாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய் வர்மாவிற்கு ஏற்கனவே எச்சரிக்கை கொடுக்கப்பட்ட நிலையில் அவர் டாஸ்கின் போது நடந்துகொண்ட விதம் அவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தியது.இதனால் அவருக்கு Red card கொடுத்து அனுப்ப வேண்டும் என்று பலர் கூறி வந்தனர். ஆனால், அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்படாமல் நாசுக்காக பிக் பாஸ் குழு அவரை வெளியேற்றியது.

முதல் வாரத்தில் நான் வார்த்தைகளால் மிரட்டிய விஜய் வர்மாவிற்கு கண்டனம் தெரிவித்த கமல், இந்த முறை அவர் பிரதீப்பிடம் மூர்க்கமாக நடந்துகொண்ட விதத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை. இதில் இருந்தே அவருக்கு redcard கொடுக்காமல் நாசுக்காக வெளியில் அனுப்பப்பட்டது தெரிகிறது. இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் Wild card குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வழக்கமாக பிக் பாஸ் சீசன்களில் ஒன்று அல்லது இரண்டு Wild card போட்டியாளர்கள் தான் வருவார்கள். ஆனால் இந்த முறை 5 Wild கார்ட் போட்டியாளர்கள் வர இருக்கின்றனர். எனவே இந்த வாரம் Double Eviction இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், அந்த 5 Wild Card போட்டியாளர்களில் முதல் இரண்டு Wild Card போட்டியாளர்களாக ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா மற்றும் பின்னணி பாடகர் கானா பாலா ஆகியோர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full