பாத்துக்க மக்களே இது தான் கடைசி Ticket To Finale டாஸ்க்காம் - நல்லா கொடுக்குறாங்க டாஸ்க்க.

By Ajju · 26/12/2023

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 84 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெற்றது. இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்கள். இதனால் பிக் பாஸ் வீடே எமோஷனல் ஆகி இருந்தது.

இப்படி ஒரு நிலையில் கடந்த வார நாமினேஷன் முடிந்துள்ளது. அதில் விஷ்ணு, மாயா, ரவீனா, மணி, நிக்சன், தினேஷ் ஆகியோர் நாமினேட் ஆகிஇருந்தனர். இந்த லிஸ்டில் ரவீனா இருந்தால் அந்த வாரமும் நிக்சன் காப்பாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் கடைசியில் விக்ரம் வெளியேறினார். அவர் வெளியேறும் போது மாயா நடந்துகொண்ட விதம் பலரை முகம் சுளிக்க வைத்தது.

https://www.youtube.com/watch?v=KAOHKv5v6Qs

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் Ticket To துவங்கப்பட்டது.இதில் அர்ச்சனா மற்றும் விஜய் பங்கேற்க கூடாது என்று போட்டியாளர்கள் ஒரு மனதாக தேர்வு செய்தனர். இப்படி இருக்க Ticket To Finale டாஸ்க் மீண்டும் துவங்கி இருக்கிறது. அந்த வகையில் இன்று Ticket To Finaleவின் கடைசி டாஸ்க் என்று பிக் பாஸ் அறிவித்து இருக்கிறார். இந்த டாஸ்கில் வென்று யார் நேரடியாக இறுதி போட்டிக்கு செல்வார்கள் என்பதை பெருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இது ஓருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் தினேஷ், விஷ்ணு, விஜய் வர்மா, மணி, ரவீனா, மாயா, நிக்சன் என்று பலர் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இதில் ரவீனா, நிக்சன், மாயா ஆகிய மூவரில் யாராவது வெளியேற வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் விருப்பம். ஆனால், கண்டிப்பாக மாயா குறைவான வாக்குகள் பெற்றாலும் அவரை பிக் பாஸ் குழு வெளியில் அனுப்பமாட்டார்கள் என்பதே உண்மை

Tamil Behind Talkies AMP · Quick view
View full