கூல் சுரேஷ் விஷயத்தை திசை திருப்பி அவன தொரத்திட்டங்க - வெளுத்து வாங்கிய விசித்ரா

By Arun · 6/11/2023

விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

மேலும், நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஒருவர் வெளியேறுவது வழக்கம் தான். அந்த வகையில் முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி விட்டார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு விஜய் வர்மா வெளியேற அவரை தொடர்ந்து 5 Wild Card போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். இதனால் Double Eviction நடைபெற்றது.

இதில் வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card பெற்று வெளியேற்றப்பட்டார். பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். டைட்டில் வின்னர் வாய்ப்பு இருந்த பிரதீப்பின் வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

https://www.youtube.com/watch?v=cBYKYacpZD0

அதிலும் குறிப்பாக அவரை எதோ பெண்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நபராக முத்திரை குத்தி அனுப்பப்பட்டது தான் பலருக்கும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது. மேலும், அவர் தரப்பு நியாயத்தை கூட பேச அவருக்கு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் பூர்ணிமா, ஜோவிகா,மாயா ஆகிய மூவரும் புதிதாக வந்தவர்கள் எங்களை பற்றி எப்படி பேசலாம்.

கண்டிப்பாக இவர்களை தான் நாங்கள் நாமினேட் செய்யப்போகிறோம் என்று ஓப்பனாக கூறினார்கள். இப்படியொரு நிலையில் இந்த வாரம் பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ், அன்னபாரதி, அக்ஷ்யா, மணி,ஐஷு, மாயா ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர். பிரதீப் வெளியேற்றப்பட்டத்தால் எலிமினேஷன் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்ன பூரணி வெளியேற்றப்பட்டார்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டார், பேசி வைத்துக்கொண்டு நாமினேஷன் செய்ததால் இனிமேல் நாமினிநேஷன் பற்றி யாரிடமும் பேசக்கூடாது அப்படி மீறினால் தண்டிக்கப்படுவீர்கள் என்று கூறிவிட்டார் கமல். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கூல் சுரேஷ் விஷயத்தை திசை திருப்பி அவன தொரத்திட்டங்க என்று விசித்ரா பேசி இருக்கிறார். மேலும், அர்ச்சனா, மனசாட்சி பிரகாரம் நீங்க ரெட் கார்ட்டை பயன்படுத்தி இருந்த்தால் சரி, அப்படி இல்லை என்றால் ஒருவரின் வாழ்க்கையை அழித்துவிடீர்கள் அவ்வளவு தான் என்று பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full