இந்த சீஸனின் முதல் Open Nomination - இந்த முறையாவது இவர் வெளியேறுவாரா?

By Rajkumar · 23/10/2023

அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி 21 நாட்களை கடந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் மற்ற பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

தல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார்.பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். தற்போது 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

மேலும், கடந்த வாரத்திற்கான நாமினேஷனில் நிக்சன்,அக்ஷயா,மணி சித்ரா, ஐசு,விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா,விக்ரம் மற்றும் பிரதீப் ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது விஜய் வர்மா இந்த வாரம் வெளியேறினார். அவரது வெளியேற்றம் பலருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியை தந்தது.

https://www.youtube.com/watch?v=uI3PIZnF4Bo

இப்படி ஒரு நிலையில் இந்த சீஸனின் முதல் ஓபன் நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. அதில் பெரும்பாலானோர் மாயா, பிரதீப் மற்றும் மணியை நாமினிநேட் செய்துள்ளனர். கடந்த வாரமும் அதற்கு முன் வாரம் கூட மாயா நாமினிட் ஆகி இருந்தார். ஆனால், கடந்த முன் வாரம் பவா செல்லுதுரை வெளியேறிய காரணத்தால் அந்த வாரம் நேமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. அதே போல கடந்த வாரமும் மாயா மூன்றாவது ஆளாக காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full