பிரதீப் குறித்து Code Word வைத்து பேசியதால் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேற்றிய பிக் பாஸ்.

By Arun · 21/12/2023

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 78 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா, அன்னயா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

கடந்த வாரம் கூல் சுரேஷ் வெளியேறிய நிலையில் தற்போது அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, விஜய் வர்மா, மணி, ரவீனா, மாயா, சரவண விக்ரம், பூர்ணிமா, விஷ்ணு ஆகிய 10 பேர் மட்டும் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்த Family Round துவங்கி இருக்கிறது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா, பூர்ணிமா, விஜய் வர்மா, விக்ரம் ஆகியோரின் குடுமபத்தினர் வந்து இருந்தனர்.

குறிப்பாக உள்ளே சென்ற பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் நிகழ்ச்சி குறித்து சில விஷயங்களை எல்லாம் பகிர்ந்து இருந்தனர். அதிலும் அர்ச்சனா அப்பா, கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று விக்ரமனுக்கு அறிவுரை இருந்தனர். அதே போல நிக்சன் தனது மகளை கள்ளி பால் ஊத்தி கொன்று விட வேண்டும் என்று கூறியது குறித்து மனம் நொந்து பேசி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=9CfynNCzSPo

இதனை தொடர்ந்து நேற்றய நிகழ்ச்சியில் விஷ்ணு, நிக்சன், மணி குடும்பத்தினர் உள்ளே சென்று இருந்தனர். இதில் விஷ்ணுவின் அக்கா விஷ்ணுவிடம் ' எல்லாரிடமும் சமமாக இரு, அதிகமாக யார் பக்கமும் போக வேண்டாம். மாயா, பூர்ணிமா இருவருக்குள் நீ போகாமல் இருப்பது நல்லது, அது அறவே வேண்டாம். அதை முழுமையாக avoid பண்ணிட்டா நல்லா இருக்கும் என்று விஷ்ணுவிற்கு அட்வைஸ் செய்து இருந்தார்.

அதே போல நிக்சன் தந்தை உள்ளே சென்ற நிட்சனை வச்சி செய்தார். மேலும், மற்ற போட்டியாளர்களிடம் படு ஜாலியாக பேசி மகிழ்ந்தார். மேலும், மணியின் அம்மா, ரவீனாவிடம் பேசிய போது அவரது பிறந்த தேதியை கேட்டு இருந்தார். அப்போது உனக்கும் அவனுக்கும் 10 ஆண்டுகள் வித்யாசம் என்று கூறி இருந்தார். இப்படியாக நேற்றைய நிகழ்ச்சி கலகலவென நிறைவு பெற்று இருந்தது.

இன்னும் ரவீனா, மாயா மற்றும் தினேஷ் ஆகிய இருவரை மட்டும் பார்க்க இன்னும் யாரும் வரவில்லை. இப்படி ஒரு நிலையில் ரவீனாவின் உறவினர்கள் உள்ளே சென்று இருக்கின்றனர். ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் 'ரெண்டு பெரும் தனியா ஒக்காந்து பேசறதுக்கா ஷோக்கு வந்தீங்கஇன்னொரு தடவ என் பொண்ண தனியா கூப்டு வச்சி பேசாத' என்று கடுமையாக எச்சரித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிரதீப்பின் red card விஷயம் குறித்து Code Word வைத்து பேசியதால் ரவீனாவின் உறவினர்கள் வெளியில் அனுப்பி இருக்கிறார் பிக் பாஸ்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full