தாயின் மீது ஆணையாகனு சொல்லிட்டு ஏன் அப்படி பண்ண - கன்பெக்ஷன் ரூமில் வாக்குவாதம் செய்த கூல் சுரேஷ் மற்றும் பிரதீப்.

By Arun · 1/11/2023

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். கடந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்தது.

https://twitter.com/I_i_ilavarisirk/status/1719345240124137772

அதன்படி கூல் சுரேஷ், வினுஷா, மாயா, சரவண விக்ரம், விஷ்ணு, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன், அக்ஷயா, நிக்ஸன், ஜோவிகா, மணி ஆகியோர் நாமினேட் ஆகிருந்தார்கள். இப்படி இருக்க கடந்த வாரம் 5 Wild கார்டு போட்டியாளர்கள் நுழைந்து இருந்தார்கள். அதில் கானா பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ் மற்றும் அன்னபாரதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள். 5 Wild Card போட்டியாளர்கல் நுழைந்ததால் பிக் பாஸில் 19 போட்டியாளராக மாறியது.

இதனால் Double Eviction என்று அறிவித்து ஷாக் கொடுத்தார் கமல். அந்த வகையில் கடந்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா வெளியேற்றப்பட்டார். Wild Card போட்டியாளர்கள் நுழைந்ததில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருந்து வருகின்றனர். இதனால் Wild Card போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டார் டார்கட் செய்ய துவங்கிவிட்டனர். இப்படி இரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.

https://www.youtube.com/watch?v=FKZKisHjHbE

அதில் மணி அடங்கிய பேண்ட் ஒன்றை போட்டியாளர்கள் தலையில் அணிந்துகொள்ள வேண்டும். அப்படி அணிந்துகொண்டு ஒரே இடத்தில் நிற்காமல் நடந்துகொண்டே இருக்க வேண்டும் அப்படி நடக்கும் போது மணியில் இருந்து சத்தம் வந்தால் அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதே ரூல்ஸ். இந்த கேமில் மாயா, பூர்ணிமா, கூல் சுரேஷ் ஆகிய சிலர் ஆரம்பத்திலேயே அவுட் ஆகிவிட பிரதீப் தனியாக நடந்துகொண்டு இருந்தார்.

அப்போது கூல் சுரேஷ் சென்று அவர் அவுட் என்று கூறினார். ஆனால், நான் அவுட் ஆகவில்லை என்று பிரதீப் கூறினார். பின்னர் அந்த சுற்றில் அவுட் ஆனவர்களை அறிவித்த போது கூல் சுரேஷ், பிரதீப் பெயரை சொல்ல நீ எல்லாம் பெரிய மனுசனா என்று திட்டி ஒரு மோசமாக T வார்த்தையை கூறினார்.இதனால் கூல் சுரேஷ் கடும் கோபத்திற்கு உள்ளானார். மேலும், போட்டியாளர்கள் அனைவரும் பிரதீப் பேசியது தவறு என்று கூறினர்.

https://twitter.com/Classicparktv/status/1719361454355439632

இப்படியாக நேற்றய நிகழ்ச்சியி நிறைவடைந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் Talent Show என்ற டாஸ்க் துவங்கி இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் ஒவ்வொவருவரும் தங்கள் திறமையை காட்ட வேண்டும். இதனை காண வெளியில் இருந்து சில பொது மக்களும் உள்ளே அனுப்பப்பட்டு இருக்கின்றனர். பிரதீப் மற்றும் கூல் சுரேஷ் ஆகிய இருவரும் கன்பெக்ஷன் ரூமில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதில் பிரதீப், நீயே பெல் அடித்துவிட்டு, தாயின் மீது ஆணையாக பொய் சொல்லலன்னு ஏன் சொன்ன, உன் மீது உள்ள உரிமையில் தான் அப்படி பேசிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full