இந்த வார நாமினேஷன், என்னங்க டைட்டில் வின்னர் விக்ரமை எல்லாம் நாமிநேட் செய்து இருக்காங்க.

By Rajkumar · 13/11/2023

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 40 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் வாரமே அனன்யா வெளியேற்றப்பட்டார்.

அவரை தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து பவா செல்லதுரை தாமாக வெளியேறினார். அவரை தொடர்ந்து விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். பின் கடந்த வாரம் சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல்.

ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், பிரதீப் மீது திட்டமிட்டு பழி போடப்பட்டதை நிரூபிக்கும் விதமாக பல வீடியோக்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வந்தனர். அதே போல பிரதீப்பின் பக்கம் இருக்கும் நியாயத்தை கமல் கேட்கவே இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது. இதுகுறித்து கமல் கடந்த சனிக்கிழமை தன்னிலை விளக்கத்தை கொடுத்து இருந்தார்.

https://www.youtube.com/watch?v=Ei2HnY7QNss

இது ஒருபுறம் இருக்க கடந்த வாரம் டந்த நாமினேஷனில் விசித்ரா, தினேஷ், அர்சனா, ஆர்.ஜே.பிராவோ, ஐஷூ மற்றும் பூர்ணிமா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள். கடந்த வாரம் நடந்த நடந்த ஓட்டிங்கில் அர்ச்சனா, விசித்ராவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறது. ரசிகர்கள் பலருமே அர்ச்சனா, விசித்ராவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். பின் பிராவோ பெரிதாக எந்த விஷயத்திலும் தலையிடவில்லை என்றாலும் பூர்ணிமா, ஐசு செய்த செயல்கள் ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி இருந்தது .

இதனால் பூர்ணிமா, ஐசுவில் யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐசு வேலோயேறினார். நேற்று ஐசு வெளியேறியதால் கதறி கதறி அழுதார் நிக்சன். இங்கே இருந்தவர்கள் தான் அவளை தொரத்தி விட்டார்கள். கடைசி மூன்று நாட்களாக அவள் என்னிடம் பயந்து பயந்து தான் பேசினால் என்று புலம்பி கொண்டு இருந்தார் நிக்சன். அதே போல மாயாவும் அவள் வெளியேறியதற்கு நான் தான் காரணம், எனக்காக தான் அவள் கேள்வி கேட்டால், அதனால் தான் அவள் வெளியில் சென்றுவிட்டார் என்றும் கூறி இருந்தார்.

https://twitter.com/Bigboss_7_tamil/status/1722620110173868329

இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. அதில் பெரும்பாலும் விக்ரம்,பிராவோ,அக்ஷயா ஆகியோரை தேர்வு செய்ய இருக்கின்றனர். மேலும், பூர்ணிமா, மணி, விசித்ரா ஆகியோரும் நாமினிஷன் லிஸ்ட்டில் வந்துள்ளனர். என்னவே இந்த வாரம் விக்ரம்,பிராவோ,அக்ஷயா ஆகிய இந்த மூன்று மிக்ஸர் போட்டியாளர்களில் இருந்து ஒருவர் தான் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full