Code Word வைத்து பேசி மாயா டீமிற்கு எதிராக பக்கா பிளான் போடும் விஷ்ணு மற்றும் தினேஷ்

By Siva · 28/12/2023

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி செல்வதால் அனல் பறந்து கொண்டு இருக்கிறது. மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர்கள் இரண்டு நபரை தேர்வு செய்து TTF போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

அந்த வகையில் அனைவருமே சேர்ந்து அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் Ticket To Finaleவின் முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் மணி, விஷ்ணு, பூர்ணிமா ஆகிய மூவருக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் இறுதியாக விஷ்ணு வென்று மூன்று புள்ளிகளை பெற்றார். இதனால் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் விஷ்ணு மீது கடும் காண்டில் இருந்தனர்.

https://www.youtube.com/watch?v=EXH3spQEvcE

இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் இரண்டாம் Ticket To Finale டாஸ்க் நடைபெற்று இருந்தது. இந்த டாஸ்க்கும் டீம் போட்டு ஆடுவது போல தான் இருந்தது. குறிப்பாக மாயா, பூர்ணிமா, நிக்சன் ஆகிய மூவரும் பக்காவாக பிளான் போட்டு விளையாடினர். இறுதியில் நிக்சன் இந்த டாஸ்கில் வென்று மூன்று புள்ளிகள் பெற்றார். அவரை தொடர்ந்து பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் வெற்றி பெற்றனர்.

நேற்று இரண்டாம் Ticket To Finale டாஸ்க் முடிந்த நிலையில் இன்று மூன்றாவது Ticket To Finale டாஸ்க் துவங்கி இருக்கிறது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் நேருக்கு நேர் அமர்ந்து தங்கள் கருத்துகளை கூறி வெல்வது போல வடிவைமைக்கப்ட்டு இருக்கிறது. பொதுவாக Ticket To Finale டாஸ்க் என்றால் தனித்து ஒருவரின் திறமை மற்றும் யுத்தியை வைத்து வெல்லும் வகையில் தான் இருக்கும் ஆனால், இந்த சீசனில் டீம் போட்டு ஆடுவது போல தான் குடுக்கப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் தினேஷ், விஜய் வர்மா, விஷ்ணு, மாயா, நிக்சன், மணி, ரவீனா ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர். தற்போது பல தனியார் வலைத்தளங்களில் நடந்து வரும் ஓட்டிங்குகளில் மாயா, நிக்சன், ரவீனா ஆகிய மூவருக்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது. இதில் கண்டிப்பாக மாயாவை வெளியேற்றமாட்டார்கள். எனவே இந்த வாரம் நிக்சன் அல்லது ரவீனா வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full