இரண்டு பேரை தேர்வு செய்து சிறைக்கு அனுப்பிய பிக் பாஸ் - யார் யார் ? என்ன காரணம் தெரியுமா ?

By Arun · 9/10/2023

அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கி தற்போது ஒரு வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. முதல்வாரமே போட்டியாளர்கள் மத்தியில் பல கலவரங்கள் தொடங்கி இருந்தது. அதிலும் விஜய் வர்மா மற்றும் பிரதீப்பின் சண்டை, விச்சித்ரா - ஜோவிகா சண்டை என்று பிக் பாஸ் வீடு அனல் பறந்தது.

ஜோவிகா மற்றும் விசித்திரா விஷயத்தில் கமல் இரண்டு பக்கமும் தனது ஆதரவை தெரிவித்து நைசாக நழுவிவிட்டார். ஆனால், விஜய் வர்மா, பிரதீப்பை மிரட்டும் தொனியில் பேசிய விவகாரத்தில் விஜய் வர்மாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக Yellow Card ஒன்றை கொடுத்தார் கமல். மேலும், இன்னும் இரண்டு Yellow Card வழங்கும் பட்சத்தில் விஜய் வர்மா வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்றும் எச்சரித்தார் கமல்.

https://www.youtube.com/watch?v=dvHwvot_nvs

அதே போல விஜய் வர்மா, பிரதீப்பின் பெற்றோர்களின் இறப்பு குறித்து கேலியாக பேசியதையும் மறைமுகமாக கண்டித்தார். இது ஒருபுறமிருக்க கடந்த வாரம் நடையப்பெற்ற முதல் வார நாமினேஷனில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றது. இதில் பவா தான் வெளியேறுவார் என்று பலர் எதிர்பார்த்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இந்த வாரம் அனன்யா வெளியேறி இருந்தார். பொதுவாக எலிமினேஷன் அறிவிக்கும் முன்னர் நாமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களின் காப்பற்றப்பட்டது யார் என்பதை அறிவித்த பின்னர் தான் எலிமினேஷன் அறிவிக்கப்படும். ஆனால், இந்த முறை நேரடியாக எலிமினேஷனை அறிவித்தார் கமல். இப்படியாக நேற்றைய எபிசோட் முடிந்தது.

https://twitter.com/Tokyoo_cool/status/1711314915838108032

இப்படி ஒரு நிலையில் இன்றைய முன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கடந்த வாரம் முழுதும் சுவாரஸ்யம் குறைவாக செயல்பட்ட இரண்டு பேரை சிறைக்கு அனுப்பி வைப்பதாக பிக் பாஸ், வினுஷா மற்றும் அக்ஷயாவை தேர்வு செய்துள்ளார். இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமிநேஷன் இன்று துவங்க இருக்கிறது. இதில் இந்த வார தலைவர் விக்ரமை யாரும் நாமினேட் செய்ய முடியாது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full