தினேஷின் திருமண வாழ்க்கை குறித்து பேசிய விசித்ரா, கொளுத்தி போட்ட கமல், தினேஷின் Reaction

By Arun · 31/12/2023

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 90 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=hDoL9ww8E08

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் இரண்டு நபரை தேர்வு செய்து TTF போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். அந்த வகையில் அனைவருமே சேர்ந்து அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தார்கள்.

இந்த வாரம் Ticket To Finaleவின் முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் இறுதியாக விஷ்ணு வென்று மூன்று புள்ளிகளை பெற்றார். இரண்டாம் டாஸ்கில் நிக்சன் முதல் இடத்தையும், பூர்ணிமா இரண்டாம் இடத்தையும் பிடித்து இருந்தார்கள். ஆனால், அதில் நிக்சன் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று. பின் மூன்றாவது Ticket To Finale டாஸ்க்கில் போட்டியாளர்கள் நேருக்கு நேர் அமர்ந்து தங்கள் கருத்துகளை கூறி வெல்வது போல வடிவைமைக்கப்ட்டு இருக்கிறது.

https://twitter.com/saravanvelu2/status/1740594878365790579

Ticket To Finale டாஸ்க்:

இந்த டாஸ்கில் வெல்பவர்களுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பின் விஷ்ணு 7 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பூர்ணமா மற்றும் நிக்சன் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருந்தனர். மேலும், டிக்கெட் டு பினாலேவின் கடைசி டாஸ்க் நடைபெற்றது. அதில் போட்டியாளர்கள் போர்டை கையில் தாக்குப்பிடித்து நிற்க வேண்டும். அதில் யார் கடைசி வரை இருக்கிறார்களோ? அவர்கள் தான் வெற்றியாளர் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

நேற்றைய எபிசோட்:

அந்த வகையில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து பலகையின் மீது கை வைத்திருந்தார்கள். அதில் விஷ்ணு மூன்று மதிப்பெண்களை பெற்றிருந்தார். ஏற்கனவே அவர் 7 புள்ளிகளை வைத்திருந்தார். மொத்தம் டாஸ்க் வெற்றிக்கு தேவையான 10 புள்ளிகளை பெற்று இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க்கின் வெற்றியாளர் ஆனார் விஷ்ணு. நேற்றய நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்ததை பற்றி கமல் எல்லாம் பேசி இருந்தார்.

இன்றைய ப்ரோமோ :

அந்த வகையில் நிக்ஸன்- விஜய் வர்மா- பூர்ணிமா இவர்கள் எல்லாம் குரூப்பாக சேர்ந்து கொண்டு டிக்கெட் டு பின்னாலே டாஸ்க்கில் செய்த வேலையை கமல் கண்டிப்பார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், கமல், நீங்கள் ஏதோ விளையாட்டாக செய்தது வெளியில் தப்பா புரிந்து கொண்டார்கள். இனிமேல் கவனமாக விளையாடுங்கள், கவனமாக பேசுங்கள் என்று சொல்லி உட்கார வைத்து விட்டார். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விசித்ரா , தினேஷுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியதை கண்டித்து இருக்கிறார் கமல் :

Tamil Behind Talkies AMP · Quick view
View full