இந்த முறையும் ஒரு ஜல்லிக்கட்டு பிரபலம் - Wild Card போட்டியாளராக நுழையும் பெண் போட்டியாளர். அட, இவர் தானா?

By Rajkumar · 27/10/2023

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் Wild Card எண்ட்ரியாக நுழைய இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

சமீபத்தில் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் Wild card குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.வழக்கமாக பிக் பாஸ் சீசன்களில் ஒன்று அல்லது இரண்டு Wild card போட்டியாளர்கள் தான் வருவார்கள். ஆனால், இந்த முறை 5 Wild கார்ட் போட்டியாளர்கள் வர இருக்கின்றனர். எனவே இந்த வாரம் Double Eviction இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த முறை ஐந்து பேர் Wild card என்ட்ரி ஆக இருக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருப்பது, நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் விளையாட தெரியாதவர்கள், மந்தமாக இருப்பவர்களை அடுத்தடுத்து வெளியேற்றலாம் என்று பிக் பாஸ் முடிவு செய்து இருக்கிறது. ஆக தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். Wild card 5 என்ட்ரி மூலம் அடுத்த வாரம் 20 பேர் இருப்பார்கள்.

மேலும், அந்த 5 Wild Card போட்டியாளர்களில் முதல் இரண்டு Wild Card போட்டியாளர்களாக ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா மற்றும் பின்னணி பாடகர் கானா பாலா ஆகியோர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த Wild card போட்டியாளர்களில் ஒருவராக அன்ன பாரதி கலந்துகொள்ள இருக்கிறார்.

மதுரை முத்துவின் பட்டிமன்றக் குழுவில் பேசி வரும் இவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொண்டு இருந்தார். சமீபத்தில் தென்மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று இவர் வர்ணனை செய்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி இதற்கு முந்தைய சீசனில் வந்து கலந்து கொண்ட திருநங்கை நமீதா மாரிமுத்துவின் மகள் பிரவீனா மாயா தான் Wild card மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=Wbd4-949_00&t=7s

நமீதா மாரிமுத்து சில வருடங்களுக்கு முன்பு தான் பிரவீனா மாயாவை மகளாக தத்து எடுத்திருந்தார். இவர்களை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து ஒரு நடிகர், இன்னொரு நடிகையும் Wild card மூலம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.இது போக மேலும் மூன்று போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் விக்கிபீடியா பக்கத்திலேயே அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் மானஸி, சாம் சமுவேல்ஸ், Kpy பாலா,ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full