பிக் பாஸ் 8ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பட்டியல் - வெளியான எக்ஸ்க்ளூசிவ் தகவல்

By subhashini · 7/9/2024

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது.

இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கு துணையாகவும், பலரின் வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம் தான். மேலும், கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சி :

இதை அடுத்து யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. கடந்த வாரம் தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் புரோமோ சூட் பாண்டிச்சேரியில் நடத்தி இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோவை தான் சேனல் தரப்பில் வெளியாகி இருக்கிறது. இதனால் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாகவும், விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 8:

இது ஒரு பக்கம் இருக்க, இந்த நிகழ்ச்சிக்காக சினிமா பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், சாதாரண மக்கள் என எல்லா தரப்பில் இருந்தும் சில பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில், மாகாபா ஆனந்த், பூனம் பஜ்வா, நடிகர் ரஞ்சித், ஜோயா, குரேஷி, ஜெகன், டிடிஎஃப் வாசன், ரியாஸ் கான் என்று பல பெயர்கள் இடம் பெற்று இருந்தது.

https://www.youtube.com/watch?v=iWAStS432d0

நிகழ்ச்சி தொகுப்பாளர் அப்டேட்:

இதில் யாரெல்லாம் நிகழ்ச்சிக்கு செல்வார்கள் என்று தெரியவில்லை ரசிகர்கள் புலம்பிக்கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் உறுதி செய்யப்பட்ட பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீசனில் பாரதிகண்ணம்மா நடிகர் அருண், 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் நடிகர் தீபக் கலந்து கொள்வார் என்று ஏற்கனவே கூறியிருந்தார்கள். இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த 'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியல் ஜோடி வினோத் பாபு- பவித்ரா ஜனனி தான் இந்த முறை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

போட்டியாளர்கள் குறித்த தகவல்:

ஏற்கனவே சீரியலில் இவர்களுடைய காம்பினேஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தொகுப்பாளர் யார்? என்ற பட்டியலில் இவருடைய பெயரும் இடம் பெற்றிருந்தது. அதற்கு பிறகு விஜய் சேதுபதி உறுதி செய்யப்பட்ட பின் இவர் போட்டியாளராக கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் யாரெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full