வீட்டை எதிர்த்து கல்யாணம், மனைவியின் லட்சியம் - பிக் பாஸ் பிரவீன் பற்றி பலரும் அறியாத தகவல்

By subhashini · 5/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 31 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறார்கள். சீரியல் நடிகை திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இவர்கள் வீட்டுக்குள் சென்ற உடனே சரவெடியாக வெடித்து இருக்கிறது.

பிக் பாஸ் 9:

மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் பிரவீன். இவர் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர். ஈரமான ரோஜாவே, சின்ன மருமகள் உட்பட பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். அதோடு இவர் சினிமாவிலும் முயற்சித்து இருக்கிறார். இதற்கிடையில் இவர் சீரியல் நடிகை ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா, ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர். அதனை தொடர்ந்தும் இவர் சில சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது தன்னுடைய அடுத்த கட்ட முயற்சியாக பிரவீன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறார்.

பிரவீன் குறித்த தகவல்:

இப்படி இருக்கும் நிலையில் பிரவீன் குறித்து அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் அளித்த பேட்டியில், ராஜா ராணி சீரியல் ஒளிபரப்பான நேரத்தில் ஐஸ்வர்யாவை சூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துக் கொண்டு வருவது, போவது எல்லாமே பிரவீன் தான். காதலை முதன் முதலாக சொன்னது ஐஸ்வர்யா. பிரவீன் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பில்லை. ஆனால், ஐஸ்வர்யா வீட்டில் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. நண்பர்கள் வட்டாரத்தில் சிலர் பேசி பார்த்தோம் ஐஸ்வர்யாவின் வீட்டில் ஒத்துக் கொள்ளவே இல்லை. வேறு வழியில்லாமல் அந்த எதிர்ப்பை மீறி தான் இரண்டு பேருமே சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள்.

பிக் பாஸ் செல்ல காரணம்:

ஒரு கட்டத்துக்கு பிறகு ஐஸ்வர்யா வீட்டில் சமாதானம் ஆகிவிட்டார்கள். நாலு காசு சம்பாதித்து வாழ்க்கையில் ஒரு நிலைமைக்கு வந்தாகணும் என்ற வைராக்கியத்தில் இரண்டு பேருமே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போயிட்டு வர்றவங்க பெருசா வர முடியவில்லை என்று சிலர் இப்பவும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எல்லாமே நம்ம கையில் தான் இருக்கு. பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான் பிரவீன் கிளம்பி போனார். இப்ப அந்த வீட்டில் நடக்கிற சில விஷயங்களை பார்க்கப்போ கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது என்று அவருடைய மனைவி ஐஸ்வர்யாவை சொல்லி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full