இந்த சீசனில் அதிக-குறைவான சம்பளம் வாங்கும் போட்டியாளர் யார் தெரியுமா? வெளிவந்த பட்டியல் இதோ

By subhashini · 13/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 39 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறார்கள். சீரியல் நடிகை திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள்.

பிக் பாஸ் 9:

இவர்கள் வீட்டுக்குள் சென்ற உடனே சரவெடியாக வெடித்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு தொடங்கி இருக்கிறது. கடந்த வாரம் ஆஹா ஓட்டல் என்ற டாஸ்க் சென்றது. இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா, மஞ்சரி, தீபக் தான் சிறப்பு விருந்தினராக இந்த டாஸ்கில் கலந்து கொண்டு இருந்தார்கள். மேலும், கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருந்தார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்த நிகழ்ச்சியிலிருந்து முதலில் துஷார் தான் வெளியே போனார். இதை அடுத்து யாரும் எதிர்பாராத விதமாக பிரவீன் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். பின் ஆறாவது வாரத்திற்கான கேப்டன் டாஸ்க் நடந்தது. இதில் சபரி வெற்றி பெற்றார். பின் ஆறாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில், கனி, திவாகர், சாண்ட்ரா, திவ்யா, பார்வதி, வியானா, fj, அரோரா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. பின் இந்த வாரம் மன்னர் ஆட்சி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சம்பளம் விவரம்:

இந்த நிலையில் பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் கலந்து இருக்கும் போட்டியாளர்கள் சம்பளம் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பட்டியலில் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்
ப்ரஜன் - 30,000
திவ்யா கணேஷ் -30,000
அமித் பார்கவ் - 30,000
சான்ட்ரா - 30,000
விஜே பார்வதி - 20,000
பிரவீன் காந்தி-
அப்சரா - 15,000 முதல் 20,000
பிரவீன் - 15,000 முதல் 20,000
சபரி - 15,000 முதல் 20,000
கம்ருதீன் - 15,000 முதல் 20,000
திவாகர் - 15,000 முதல் 20,000
அரோரா சிங்க்ளேர் - 12,000
வியானா - 12,000
கனி - 10,000
எப்.ஜே - 10,000
துஷார் - 10,000
ஆதிரை - 10,000
கானா பாடகர் வினோத் - 8,000
கலையரசன் - 8,000

Tamil Behind Talkies AMP · Quick view
View full