அதுக்குள்ளே வைல்ட் கார்ட் என்ட்ரியா? பிக் பாஸ் வீட்டுக்குள் போக இருக்கும் போட்டியாளர்கள் யார்?

By subhashini · 18/10/2025

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் என்ட்ரி குறித்த தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 13 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. பின் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மூன்றே நாளில் போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நந்தினி வெளியேறினார். பின் முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேறி இருந்தார்.

பிக் பாஸ் 9:

மேலும், இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் அதிக பேர் நாமினேட் செய்த போட்டியாளர் பார்வதி தான். அவரை அடுத்து கம்ருதினை தான் நாமினேட் செய்திருக்கிறார்கள். அதற்குப்பின் அரோரா, எப்ஜே, அப்சரா, ரம்யா, சபரி, கெமி, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இதற்கிடையில் கேப்டன் டாஸ்க் நடைபெற்று இருந்தது. இதில் துஷார் தான் வெற்றி பெற்று வீட்டின் தலைவரானார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

பின் சில தினங்களுக்கு முன் பிக் பாஸ், இந்த சீசனில் டிசிபிலின் இல்லை என்று தல பதவியை பறித்தார். பின் நிகழ்ச்சியை சுவாரசியமாக்கும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளர் குறித்த அப்டேட் தான் தற்போது வைரலாகி வருகிறது. வருடம் வருடம் சில வாரங்கள் கடந்த பிறகு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே நுழைவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த சீசனில் மூன்றாவது வாரத்திலேயே வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கும் என்று கூறுகிறார்கள். அந்த வகையில் இந்த வைல்ட் கார்ட்டில் பிரபல ஜோடியான பிரஜன்- சாண்ட்ரா தான் உள்ளே நுழையப் போவதாக கூறப்படுகிறது.

வைல்ட் கார்ட் போட்டியாளர் :

இருவருமே சின்னத்திரை நடிகர்கள் தான். இவர்கள் நடித்த சீரியல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதோடு இருவருமே வெள்ளி திரையில் சில படங்களில் நடித்திருக்கிறார்கள்.
பின் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பே இரண்டாவது சீசனில் தாடி பாலாஜி மற்றும் அவருடைய மனைவி நித்யா இருவருமே ஜோடியாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full