நேற்று அபிஷேக்கிற்கு செம பல்ப் கொடுத்த சுருதி - வீடியோவை போட்டு கோமாளி பட இயக்குனர் போட்டுள்ள கமன்ட் (இவரும் பாதிக்கப்பட்டிருக்கார் போல)

By Rajkumar · 22/10/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் இரண்டு வாரத்தை நிறைவு செய்து இறுகிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல பரிட்சயமான பல போட்டியாளர்களால் கலந்துகொண்டு இருந்தாலும் யூடுயூபில் விமர்சனங்களை பார்க்கும் நெட்டிசன்களுக்கு அபிஷேக் ராஜாவை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்கும். யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் இருக்க முடியாது.

https://twitter.com/Mysteri13472103/status/1451494627719086081

அதுவும் இவர் பிரபலங்களை பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் இவர் கொடுக்கும் ரியாக்ஷன்களில் கண்டு கடுப்பாகத்தவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் ஆன்டனி பேட்டி ஒன்றில் இவர் பாடிய 'வெயிலோடு விளையாடி' பாடலை பலரும் வச்சி செய்தனர்.

பொதுவாக பிக் பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே ஹேட்டர்ஸ்கள் உருவாவார்கள். ஆனால், உள்ளே செல்லும் போதே ஹேட்டர்ஸ்களுடன் சென்றவர் அபிஷேக் தான். அதிலும் இவர் பிக் பாஸில் நடந்து கொள்ளும் விதத்தால் பலரும் இவரை மேலும், வெறுக்கத் துவங்கி இருக்கின்றனர்.

அதிலும், அடிக்கடி சக போட்டியாளர்களிடம் பல்ப் வாங்கி வருகிறார். அந்த வகையில் நேற்று சுருதியை தனக்கு சாதகமாக சமாதானம் செய்து கொண்டு இருக்கும் போது சுருதி 'நீங்க மூடினு உங்க வேலைய பாருங்க' என்று பல்ப் கொடுத்தார். இப்படி ஒரு நிலையில் அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள கோமாளி பட இயக்குனர் 'இதே தான் இவர் வெளிய இருக்கும் போதும் சொன்னோம்' என்று கேலி செய்து உள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full