பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமிதா மாரிமுத்து வெளியேறியதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் வெளியேறியதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது.அதிலும் இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இறக்கின்றனர். மேலும், தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்த சீசனில் முதல் திருநங்கையாக நமிதா மாரிமுத்து என்ற ஒரு திருநங்கை போட்டியாளரும் கலந்து கொண்டு இருந்தார்.

இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் கடந்து வந்த துயரங்களையும் கஷ்டங்களையும் சொல்லி வருகிறார்கள். அந்தவகையில் நமிதா மாரிமுத்து அவர்கள் தன் கதையை கூறியிருந்தார். அதில் அவர் சிறு வயதில் பட்ட கஷ்டங்கள், பெற்றோர்களால் அனுபவித்த கொடுமைகள் பற்றி எல்லாம் சொல்லி இருந்தது பலரையும் கண் கலங்க வைத்தது.

Advertisement

அதே போல இவரது பேச்சு ஒட்டுமொத்த திருநங்கைகளின் குரலாக ஒலித்ததால் இவரது பேச்சை கொஞ்சம் கூட எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பியது பிக் பாஸ் குழு. இது பலரால் பாராட்டப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இவர் நேற்றய நிகழ்ச்சியில் இவர் சில தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறி இருப்பதாக பிக் பாஸ் அறிவித்தார்.

நமீதாவிற்கு தீவிரமான தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் அவர் வலியில் துடித்ததால் அவர் பனிமலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இவருக்கு ரெட் கார்டு கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நமிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர் ஒருவரிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து ரகளை செய்ததாக கூறப்படுகிறது.

Advertisement

அவரை பிக் பாஸ் குழு எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் அது பலனும் அளிக்காததால் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நமிதா மற்றும் தாமரை செல்விக்கும் சில வாக்கு வாதங்கள் ஏற்பட்டு இருந்தது. ஒரு வேலை இவர்கள் இருவருக்கும் சண்டை முற்றி நமீதா இவ்வாறு செய்துவிட்டாரா என்பதும் தெரியவில்லை.

Advertisement
Advertisement