ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகங்களை விட முகம் தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்த சீசனில் நமிதா மாரிமுத்து என்ற ஒரு திருநங்கை போட்டியாளரும் கலந்து கொண்டிருந்தார்.

இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நாட்களிலேயே தவிர்க்க முடியாத காரணத்தினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறினார் என்று அறிவிக்கப்பட்டது. நமீதாவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்றும் கூறப்பட்டது.

Advertisement

நமீதா மாரிமுத்து கொரோனா தொற்றால் வெளியேறி மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருவதை குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரித்தபோது நமிதா மாரிமுத்துவுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகி இருந்தது. கடந்த 8 ஆம் தேதி அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து நமிதா அவர்கள் காயங்களுடன் வெளியேறி உள்ளார்.

பின் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை கல்லூரி முதல் உதவி அளிக்கப்பட்டது. பின் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், 100 நாட்கள் முழுமை பெறும் வரை வாயை திறக்கக் கூடாது என்று ஒப்பந்தம் அடிப்படையில் சம்பளம் வழங்குவார்கள். இதனால் தான் நமீதா மாரிமுத்து வாயை திறக்காமல் உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Advertisement

அதே போல அவர் வெளியேறிய காரணம் குறித்து இதுவரை எந்த ஒரு தெளிவான காரணமும் வெளியாகவில்லை. அவரும் எந்த வித பேட்டியிலும் பங்குபெறவில்லை. இப்படி ஒரு நிலையில் நமிதா, சாலையோரம் வசிக்கும் ஏழை எளியோரின் குழந்தைகளுக்கு துணி மணிகளைவாங்கி கொடுத்து இருகிறார். அந்த வீடியோவை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவர் பதிவிட ரசிகர்கள் பலரும் அவரை மீண்டும் பிக் பாஸில் கலந்து கொள்ள சொல்லி கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Advertisement