'எனக்கு இனி யாரும் வேண்டாம் அண்ணா' - இரண்டாம் திருமணம் இதனால் தான் நின்றதா - Unseen வீடியோ இதோ.

By Rajkumar · 18/10/2021

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் இரண்டு வாரத்தை கடந்துவிட்டது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம்தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.

அந்த வகையில் பாவனி ரெட்டியும் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு நடிகை தான். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவருடன் ஒரு சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி வாழ்ந்து வந்த இருவரது வாழ்க்கையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

திருமணமா 8 மாதத்தில் 2017 மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் பிரதீப். அதன் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை பாவனி, ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். ஆனால், இவரை பற்றி பாவனி கடந்து வந்த பாதை டாஸ்கில் சொல்லவில்லை.

இதனால் பாவனி மீது பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், பாவனி முதல் கணவர் இறப்பிற்கு பின் ஒருவரை விரும்பினார் என்றும் அவரை திருமணம் செய்துகொள்ள இருந்ததாகவும் ஆனால், அவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த திருமணம் நடக்கவில்லை என்று விளக்கமளித்தார் பாவனியின் அக்கா சிந்து.

https://twitter.com/chettyrajubhai/status/1448911664670117888

இந்த நிலையில் இரண்டாம் திருமணம் ஏன் நடக்கவில்லை என்று பாவனி பேசியுள்ள Unseen வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full