பிக் பாஸ் 5வில் கலந்து கொள்ளப் போகும் பிரபல நடிகை ? - இவங்க வனிதாவையே தெறிக்கவிட்டவங்களாச்சே.

By Rajkumar · 8/8/2021

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தள்ளது. ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று உறுதியாகிவிட்டது.

இதையும் பாருங்க :" சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம் குறித்து ரஞ்சித் சொன்ன செம தகவல் - இதான் கதையாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் தொலைக்காட்சி என்டிமால் நிறுவனத்துடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளதாம். எனவே, இனி வரும் 6 சீசன் வரை பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகும். கடந்த சில மாதங்களாகவே இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பெயர்கள் அடிக்கடி அடிபட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த சீசனில் கலந்துகொள்ள பிரபல நடிகர் ரம்யா கிருஷ்ணனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் பிபி ஜோடியில் வனிதாகும் ரம்யா கிருஷ்ணனுக்கும் முட்டிக்கொண்டது. இந்த விவாகரத்தில் வனிதாவின் அடாவடிக்கு அடங்காமல் கெத்து காட்டி இருந்தார் ரம்யா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full