என்னங்க பெரிய பிக் பாஸ், லெப்ட் ஹாண்டில் டிஆர்பியில் முந்திய விஜய் டிவி சீரியல்கள்

By subhashini · 18/10/2024

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்க் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று 12ஆம் நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒருபுறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார்.

பிக் பாஸ் சீசன் 8:

மேலும், இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷனில் அதில் அதிக வாக்குகளை பெற்று சௌந்தர்யா, ஜெஃப்ரி, ரஞ்சித், அர்னவ், விஷால், முத்து, தர்ஷா, சாச்சனா, ஜாக்லின், தீபக் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். பின் இரண்டாம் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் சத்யா வெற்றி பெற்றார். அதற்குப்பின் ஆண்கள் அணியில் இருந்து தீபக்கும், பெண்கள் அணியில் இருந்து தர்ஷாவும் இடம் மாறினார்கள். நேற்று பிக் பாஸ் டாஸ்க் கொடுத்து இருந்தார். அதில் யார் அறிவில், திறமையில், டீம் ஒற்றுமையில் சிறந்தவர் என்பதை காண்பிக்க வேண்டும்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

எந்த அணி வெற்றி பெறுகிறதோ அவர்கள் நாமினேஷனில் இருந்து ஒருவரை காப்பாற்றலாம் என்று அறிவித்தார். இதை அடுத்து நடந்து முடிந்த மூன்று டாஸ்கில் பெண்கள் அணி தான் வென்றார்கள். பின் பெண்கள் அணியில் ஒரு நபரை நாமினேஷனில் இருந்து காப்பாற்றலாம் என்று பிக் பாஸ் அறிவித்து இருக்கிறது. இப்படி இதற்கு முந்தைய சீசன்களை விட பரபரப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்ல பிக் பாஸ் டாஸ்க்குகளை கொடுத்து வருகிறது. ஆனால், போட்டியாளர்கள் ஜாலியாக விளையாடாமல் ஈகோ மோதலுடன் ஆரம்பித்து இருக்கிறார்கள்.

பிக் பாஸ் டிஆர்பி ரேட்டிங்:

இதனால் இது பார்வையாளர்களுக்கு கொஞ்சம் கடுப்பை தான் ஏற்றி வருகிறது. அது மட்டும் இல்லாமல் தற்போது இருக்கும் சீசனில் 13 பேர் விஜய் டிவி பிரபலங்கள் தான். சீரியலில் வாய்ப்பு இல்லாதவர்கள் எல்லாம் ஒன்று சேர்த்து நிகழ்ச்சியில் இறக்கி இருக்கிறார்கள். இதனால் பார்ப்பதற்கு சீரியல் பார்ப்பது போல அழுகையாக இருக்கிறது. ஆக மொத்தம் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிதாக கவரவில்லை என்று தான் சொல்லணும். அதற்கு ஆதாரமாக தற்போது வெளியாகி இருக்கும் டிஆர்பி ரேட்டிங்கில் 6 புள்ளிகளை தான் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி பெற்றிருக்கிறது.

சீரியல் டிஆர்பி ரேட்டிங்:

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 8.2 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. அதை எடுத்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் 7 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும், பாக்கியலட்சுமி சீரியல் 6.4 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியே இருக்கிறது. இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு பதிலே சீரியலையே பார்த்து விடலாம் என்று மக்கள் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு நிகழ்ச்சி ரொம்ப போரிங்காக சென்று கொண்டிருக்கின்றது. இனிமேலாவது வித்தியாசமான டாஸ்குகள் மூலம் போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி மக்களை கவருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full