பிக் பாஸ் சீசன் 9ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ - இந்த முறை யார் யார் தெரியுமா?

By subhashini · 20/8/2025

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்திய அளவில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். அதற்குப் பிறகு தான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை எட்டு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கு துணையாக இருக்கிறது. ‌ பலரின் வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம்.

பிக் பாஸ் நிகழ்ச்சி:

இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. முதல் ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பின் கடந்த எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இவரின் பேச்சும் கருத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் சீசனில் ஓவியா டைட்டில் பெற்றிருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசன் ராஜி, ஆறாவது சீசனில் அசிம், ஏழாவது சீசனில் அர்ச்சனா, கடைசியாக எட்டாவது சீசனில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகியிருந்தார்கள். கடந்த எட்டாவது சீசனில் பிக் பாஸ்-சுமால் பாஸ் என்று இரண்டாக பிரித்து வித்தியாசமாக நடத்தி இருந்தார்கள். இதை அடுத்து கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்து அப்டேட் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 9:

அதாவது, ஆரம்பத்தில் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடந்தது. கொரோனாவிற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டது. அக்டோபரில் தொடங்கி ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வரை நடத்தப்பட்டது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முன்கூட்டியே ஆரம்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.அதாவது செப்டம்பர் மாதத்திலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் .

https://www.youtube.com/watch?v=k-duvrFB9Q0

போட்டியாளர்கள் லிஸ்ட்:

இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

குக் வித் கோமாளி உமைர்

விஜே பார்வதி

சீரியல் நடிகை அக்ஷிதா அசோக்

குக் வித் கோமாளி ஷபானா

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா மேனன்

நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன்

நடிகர் பாலசரவணன்

நடன இயக்குநர் சதீஸ் கிருஷ்ணன்

சீரியல் நடிகர் புவி அரசு

சீரியல் நடிகர் வினோத் பாபு

இந்த பத்து பேருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆடிஷன் நடந்திருக்கிறது. இதிலிருந்து கூட போட்டியாளர்கள் தேர்வாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், போட்டியாளர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full