ப்ரோமோ வெளியான நிலையில் பிக் பாஸ் 4 துவங்கும் தேதி அறிவிப்பு.

By Rajkumar · 29/8/2020

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=j-XzWLGSQLw

தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே தெலுங்கிலும் இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்து உள்ளது. பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் முதல் சீசனை முதல் சீசனை ஜூனியர் NTR தொகுத்து வழங்கி வந்தார். அவருக்கு நல்ல வரவேற்பு, ரசிகர்களும் அதிகம் என்பதால் சம்மந்தப்பட்ட சானல் முன்னேற்றம் கண்டது.இதனால் இரண்டாவது சீசனிலும் அவரையே கமிட் செய்ய திட்டமிட்டனர்.

ஆனால், அந்த சமயம் என் டி ஆருக்கு தேதி கிடைக்காததால் நடிகர் நாணியை இரண்டாம் சீசனின் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்த்தனர். ஆனால், முதல் சீசனை போல இரண்டாவது சீசன் வரவேற்பை பெறவில்லை இதனால் மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் 4 தெலுங்கு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

https://twitter.com/StarMaa/status/1298996344221122561

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருந்தது . தற்போது தெலுங்கு பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தெலுங்கு பிக் பாஸ் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full