என் மகளை வச்சி Blackmail பண்றா, நீ எப்படின்னா போ என் மகள விட்று - குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் பாலாஜி புகார்

By Rajkumar · 1/4/2022

கடந்த சில வருடமாகவே சோசியல் மீடியாவில் தாடி பாலாஜியின் குடும்ப பிரச்சனை தலை விரித்து ஆடி கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவரின் குடும்ப பிரச்சனை ஊருக்கே தெரிந்தது. நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். தாடி பாலாஜியும், நித்யாவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனம் ஆடிய போது தான் இவர்களுக்கு இடையே இருந்த குடும்ப பிரச்சினை வெளிவந்தது.

பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து போலீஸ், கோர்ட்டு என இவர்களுடைய குடும்ப பிரச்சனை வெளியுலகத்தில் வந்துகொண்டிருந்தது.அதோடு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தான் தமிழில் நடைபெற்ற பிக் பாஸ் இரண்டாவது சீசனில் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள்.

மகளை வைத்து வெளியிட்ட வீடியோ :

பிக் பாஸ் சீசன் இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது. ஆனால், இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும், நித்யா தன் மகள் போஷிகா உடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.தாடி பாலாஜி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்த போது தனது மகள் குறித்து கண் கலங்கி பேசி இருந்தார். அப்போது தன் மகளிடம் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் நித்யா.

https://www.youtube.com/watch?v=kXp5Gz7BAts&t=365s

எச்சரித்த நித்யா :

அதில் பாலாஜி என்னுடைய கேரக்டரை ரொம்ப அசிங்க படுத்தி கொண்டிருக்கிறார்.என்னை பற்றி ரொம்ப ரொம்ப தப்பா பேசினால் நான் கண்டிப்பாக அவர் என்னை அசிங்க அசிங்கமாக திட்டிய வாய்ஸ் மெசேஜை வெளியிடுவேன். என்னமோ அவர் மகள் மீது பாசம் இருப்பது போல காண்பித்து கொள்கிறார் எல்லாம் பொய் என்று பேசியதோடு தன் மகளையும் பாலாஜி குறித்து பேச வைத்தார் நித்யா.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் புகார்

இந்த நிலையில் தனது மகளை, மனைவி பிடியிலிருந்து மீட்டுத் தரும்படியும் மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நடிகர் தாடி பாலாஜி தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நானும் என் மனைவியும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்ததாகவும், மகள் போஷிகா மனைவி பராமரிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும், இவர் எப்படி வேண்டுமானலும் அவர் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளட்டும்

https://www.youtube.com/watch?v=D1B7FKkrdm0

மகள் வாழ்கை பாழாகிறது :

ஆனால், மகள் வாழ்கை பாழாகிறது. அவள் நல்ல மார்க் வாங்குற பொண்ணு . சமீபகாலமாக மகளை பள்ளிக்கு சரியாக போக விடாமலும் தவறான வழிகாட்டுதலால் தன் மகளை மிரட்டி தன்னிடம் பணம் பறிக்கும் முயற்சியில் மனைவி நித்யா ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் மகளின் எதிர்காலத்தை கெடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் என்னை பற்றி தவறாக பேச வைப்பதாகவும் தெரிவித்தார். எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாடி பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார். 

Tamil Behind Talkies AMP · Quick view
View full